கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், இன்று அவரது 44-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு அனைத்து கிரிக்கெட் வீரர்களும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து கொண்டுவருகின்றனர்.
அவரை கிரிக்கெட்டில் சிறந்த வீரராக கருதப்படுகின்றனர். அவர் 2015-இல் வெஸ்ட் இந்தீஸுடன் நடந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு தனது ஓய்வை அறிவித்தார் சச்சின் டெண்டுல்கர். இவர் கிட்டத்தட்ட 25 ஆண்டு காலமாக கிரிக்கெட் விளையாடினார். இவர் டெஸ்டில் 200 போட்டிகள் விளையாடி 15921 ரன் அடித்துள்ளார். அதில் 51 சதம் மற்றும் 68 அரைசதம் அடித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் கடைசியாக ஒருநாள் போட்டியில் 2012-ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடினார். அவர் ஆடிய 463 ஒருநாள் போட்டியில் 18,426 ரன்கள் அடித்துள்ளார். அவர் ஒருநாள் போட்டியில் 49 சதம் அடித்துள்ளார். இதிலும் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் தான் முதலில் உள்ளார்.
ஆகமொத்தம் அவரது சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 664 போட்டிகளில் விளையாடி 34,357 ரன்களும் , 100 சதமும் அடித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர்களின் வாழ்த்துகளை இப்பொழுது பாப்போம்: