இந்தியாவில் சாஹா தான் சிறந்த விக்கெட்-கீப்பர், அவர் மீது ஒரு கண் வையுங்கள் – சவுரவ் கங்குலி

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக வளம் வருகிறார். அவர் கேப்டன் ஆனது தொடர்ந்து எட்டு டெஸ்ட் தொடர் மற்றும் ஆறு ஒருநாள் தொடர் என கைப்பற்றி அசத்தி வருகிறார். அவர் என்னதான் பல வெற்றிகளை வாங்கி தந்தாலும் அவருடைய சீனியர் மகேந்திர சிங் தோனியிடம் ஆலோசனை பெறுவதை நிறுத்துவதில்லை.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, விராட் கோலிக்கு தோனி தேவை மற்றும் 2019 உலகக்கோப்பை வரை இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி விளையாட வேண்டும் என கங்குலி கூறினார்.

“நானும் அதே தான் நினைக்கிறன். 2019 உலகக்கோப்பை வரை தோனி தேவை. முக்கியமாக விராட் கோலிக்கு தோனி தேவை. 2004 இல் பாகிஸ்தானில் பார்த்த தோனி இல்லை, இது வேறு தோனி. ஒரு விக்கெட்-கீப்பராக மட்டும் இல்லாமல் ஆலோசனை கொடுக்க விராட் கோலிக்கு தோனி தேவை. ஸ்டம்புக்கு பின் அவர் தான் பெஸ்ட்,” என கங்குலி கூறினார்.

“ஒரு வீரருக்கு வைத்துக்கொள்வது அவருக்கு தேவை, அதை தான் விராட் கோலி செய்தார். வயது ஆக ஆக ஆட்டம் மாறி கொண்டே தான் வரும். வயதாக ஆக சச்சின் டெண்டுல்கருக்கு ஆட்டம் மாறிவிட்டது. 2019 உலகக்கோப்பை வரை அவரால் விளையாட முடியும். அவரின் உடல்தகுதி பக்காவாக இருக்கிறது, முக்கியமாக கோலி அவரை வைத்துக்கொள்வார்,” என கங்குலி தெரிவித்தார்.

தற்போது இந்திய அணி நியூஸிலாந்து அணியுடன் விளையாடவுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அக்டோபர் 22ஆம் தேதி தொடங்குகிறது. அதன் பிறகு நியூஸிலாந்துடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது இந்தியா. இதனால், கேப்டனாக மற்றும் வீரராக சிறப்பாக விளையாடி இன்னொரு தொடரை வெல்ல விராட் கோலி காத்திருக்கிறார்.

“இந்திய அணி அருமையாக விளையாடி வருகிறது, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் அல்லது டி20 யாக இருந்தாலும், முன்னதாக இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்துடன் இந்திய அணி சிறப்பாக விளையாடியது,” என கங்குலி தெரிவித்தார்.

“வெளிநாட்டுக்கு சென்று தான் யாரென்று காண்பிக்க இந்திய அணி ரெடியாக உள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களை உடற்தகுதியுடன் வைத்துக்கொள்வது தான் முக்கியமான விஷயம். புவனேஸ்வர் குமார் மற்றும் ஜேஸ்ப்ரிட் பும்ரா விளையாடி பார்த்திருக்கிறோம் இதனால் உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமியை விளையாட வைக்க வேண்டும்,” என கங்குலி கூறினார்.

இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா இந்திய அணியில் இடம் பிடித்ததில் இருந்து அருமையாக விளையாடி வருகிறார். முக்கியமாக ஒருநாள் போட்டிகளில் அவர் எதிரணியை துவம்சம் செய்கிறார். ஆனால், அவரை பற்றி நான் இப்போது பேச மாட்டேன் என கங்குலி கூறிவிட்டார்.

“ஹர்டிக் பாண்டியா பேட் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல் படுகிறார். தென்னாபிரிக்காவில் அவர் நான்காவது பந்துவீச்சாளராக களமிறங்கவேண்டும். அவர் தென்னாபிரிக்காவின் ஜாக் காலிசை பின் பற்ற வேண்டும். அதே நேரத்தில் ஒரு கண்ணை வ்ரிதிமான் சாஹா மீது வைக்கவேண்டும். விக்கெட்-கீப்பிங்கில் தோனியை விட சாஹா சிறந்தவர். இதனால், அவர் மீதும் ஒரு கண்ணை வைக்கவேண்டும்,” என கங்குலி தெரிவித்தார்.

இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் தினேஷ் கார்த்திக் போட்டிகளில் விளையாடுவதில்லை இதனால் கங்குலி கவலை படுகின்றார். அதே நேரத்தில் கடந்த ஆண்டுகளில் பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட்ட லோகேஷ் ராகுலையும் நீக்கியதை பற்றி கேள்வி கேட்டார் கங்குலி.

“தினேஷ் கார்த்திகை வைத்து கொண்டு அணி என்ன செய்கிறது என்று புரியவில்லை. இரண்டாவது விக்கெட்-கீப்பர் என்றால் பரவாயில்லை. ஆனால், லோகேஷ் ராகுலுக்கு பதிலாக அவர் இருக்க முடியாது. அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட லோகேஷ் ராகுலை ஏன் நீக்கினார்கள் என்று புரியவில்லை,” என்று கங்குலி கேள்வி எழுப்பினார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.