“மொத்த குடும்பமும் எங்க நாட்டுக்கு குடிபெயரலாம், அணியின் கேப்டனும் நீங்க தான்” சாம்சனுக்கு ஆஃபர் மேல் ஆஃபர் கொடுத்த வெளிநாட்டு கிரிக்கெட் வாரியம் – இந்திய நாட்டிற்காக உதறித்தள்ளிய சஞ்சு சாம்சன்!

தங்களது நாட்டிற்காக ஆடவேண்டும் என்று மிகப்பெரிய சலுகையை அயர்லாந்து அணி முன்வைத்தும், இந்தியாவிற்காக  அனைத்தையும் உதறித்தள்ளியுள்ளார் சஞ்சு சாம்சன்.

2015 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான சஞ்சு சாம்சன், ஒவ்வொரு வருடமும் ஓரிரு தொடர்களில் எடுக்கப்பட்டு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் மீண்டும் வெளியேற்றப்பட்டு விடுவார். இப்படியாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த 2022 ஆம் ஆண்டு சில டி20 போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு கிடைத்தது. கொடுத்த வாய்ப்பை நன்றாகவும் பயன்படுத்தினார். ஆசியகோப்பை மற்றும் டி20 உலககோப்பையில்  விளையாட இடம்கிடைக்கும் கனவிலும் இருந்திருக்கிறார். இந்த இரண்டு மிகப்பெரிய தொடர்களிலும் சஞ்சு சாம்சன் எடுக்கப்படவில்லை.

நியூசிலாந்து அணியுடன் நடந்த டி20 மற்றும் ஒருநாள் தொடரில் கொடுக்கப்பட்டது. ஆனால் வழக்கம்போல பிளேயிங் லெவனில் எடுக்கவில்லை. ஒரு போட்டியில் மட்டுமே விளையாட வைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பங்களாதேஷ் தொடரில் தேர்வு செய்யப்படவே இல்லை.

2015 முதல் 2022 வரை ஏழு ஆண்டுகளில் வெறும் 27 சர்வதேச போட்டிகளில் மட்டுமே சாம்சன் விளையடியுள்ளார். இதிலிருந்தே அவர் எந்த அளவிற்கு மறுக்கப்பட்டிருக்கிறார் என்பதை புரிந்துகொள்ளலாம். ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக நன்றாக செயல்பட்டு வரும் இவருக்கு ஏன் போதிய வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை? என்று ட்விட்டரில் ஒவ்வொரு தொடரின் போதும் ரசிகர்கள் கேள்விகளை எழுப்புவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில் சஞ்சு சாம்சன் திறமையை புரிந்து கொண்ட அயர்லாந்து கிரிக்கெட் வாரியம், தங்களது நாட்டிற்கு விளையாட வைப்பதற்காக அவரை அணுகி இருக்கிறது. ஆனால் எவ்வளவு மறுக்கப்பட்டாலும் தொடர்ந்து இந்திய அணியில் விளையாட வேண்டும் என்பதற்காக அயர்லாந்து அணி கொடுத்த சலுகைகளை மற்றும் வாய்ப்புகளை உதறித்தள்ளி இருக்கிறார் சஞ்சு சாம்சன். இந்த தகவல் சமீபத்தில் தான் தெரியவந்துள்ளது.

சஞ்சு சாம்சன் தரப்பிலிருந்து வெளியான தகவலின்படி, அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் கேப்டன் பொறுப்பு மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அயர்லாந்தில் தங்கும் உரிமம் என பல்வேறு சலுகைகளை கொடுத்துள்ளார்கள். டி20 உலககோப்பை மற்றும் ஆசிய கோப்பை இரண்டும் அடுத்தடுத்து வரவிருந்ததால், அதில் விளையாடுவதற்காக இந்த சலுகைகளை அவர் நிராகரித்திருக்கிறார் சஞ்சு சாம்சன்.

இதில் கூடுதல் சோகம் என்னவென்றால், எந்த டி20 உலககோப்பை மற்றும் ஆசியகோப்பை இரண்டிலும் விளையாட வேண்டும் என்பதற்காக சஞ்சு சாம்சன் அயர்லாந்து வாய்ப்பை மறுத்தாரோ, அந்த இரண்டு தொடர்களிலும் அவரை இந்திய அணி நிர்வாகம் எடுக்கவில்லை.

தற்போது வரை அயர்லாந்து அணி நிர்வாகம் சஞ்சு சம்சனை தங்கள் நாட்டிற்கு விளையாட வைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை செய்து வருவதாகவும் தெரிகிறது. ஒருவேளை அயர்லாந்து சென்று அந்த அணிக்காக சஞ்சு சாம்சன் விளையாட வேண்டும் என்றால் ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிக்க வேண்டும் என்கிற பிசிசிஐ விதிமுறையும் உள்ளது.

இதற்கு முன்னர் அண்டர் 19 இந்திய அணியின் கேப்டனாக இருந்த உன்முக் சந்த், சர்வதேச இந்திய அணியில் போதிய அளவு வாய்ப்பு கிடைக்காததால் அனைத்து போட்டிகளிலும் இருந்து ஓய்வு அறிவித்துவிட்டு, தற்போது யுனைடெட் ஸ்டேட்ஸ் கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.