ஆரம்பத்திலேயே முக்கியமான மூன்று விக்கெட்டுகளை இழந்ததால் அதிலிருந்து நாங்கள் மீளமுடியவில்லை என நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மிச்செல் சாண்ட்னர் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றிருந்தது.
இதற்கிடையே, நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி முதலில் இருந்தே விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.
இந்நிலையில், இந்திய பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சால் துவக்கத்திலேயே முக்கியமான 3 விக்கெட்டுகளை இழந்ததால் அதிலிருந்து தங்களால் மீள் முடியவில்லை என நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சாண்ட்னர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்த தோல்வி எங்களை மனவேதனைக்கு ஆளாக்கியுள்ளது. இதற்கு காரணம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தான். அவர்கள் துல்லியமாக பந்து வீசியதில் முக்கியமான மூன்று விக்கெட்டுகளை முதலில் இழந்துவிட்டோம். அதிலிருந்து எங்களால் மீண்டு வர முடியவில்லை.
230 என்ற இலக்கு மிக எளிதானது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஷிகர் தவான் சிறப்பாக ஆடினார். அதுபோல் தினேஷ் கார்த்திக் இறுதியில் சிறப்பாக ஆடி வெற்றி பெற உதவினார். ஆனாலும், 2-1 என்ற கணக்கில் தொடரை வெல்ல முயற்சிப்போம், என தெரிவித்துள்ளார்.