இந்தியா – இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட்டின் இரண்டாவது நாளான இன்று முதல் நாள் போலவே இந்தியா தனக்கே உரிய பாணியில் பேட்டிங்கில் ஆதிக்கம் செல்த்தியது. இரண்டாவது தேநீர் இடைவேளையின் போது இந்தியா 553/7 என்ற வலுவான நிலையில் இருந்தது. ரவிந்த்ர ஜடேஜா 37 ரன்களிலும் வ்ரித்திமான் சஹா 59 ரன்களையும் சேர்த்திருந்துதனர்.
பின்னர் தேநீர் இடைவேளைக்கு பின்னர் வந்து ஆட்டத்தை துவங்கிய இருவரும் தங்கள் பங்கிற்க்கு மேலும் ரன்களை சேர்த்தனர். பின்னர் வேகமாக ரன் சேர்க்க நினைத்து ஹெராத் பந்தில் வ்ரித்திமன் சஹா இறங்கி அடித்து பந்தை தவர விட கீப்பர் நிரோஷன் டிக்வெல்லா லாவகமாக பந்தை கைப்பற்றி ஸ்டெம்பிங்க் செய்தார். பின்னர் வந்த மொஹம்மது ஷமி தன் பங்கிற்க்கு மூனு சிக்சர்களை பறக்க விட இந்தியாவின் ஸ்கோர் 600ஐ தாண்டியது.
பின்னர், இந்த நாள் ஆட்ட நேர முடிவிற்க்கு 20 ஓவர்கள் மீதம் இருக்கும் நிலையில் கேப்டன் விராட் கோலி டிக்ளேர் செய்து இலங்கை அணியை பேட்டிங் செய்ய பணித்தார். பின்னர் களம் இறங்கிய இலங்கை அணி சார்பாக திமுத் கருணாரத்னேவும் உபுல் தரங்காவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை வீசிய மொஹம்மது ஷமி மெய்டன் செய்தார். பின்னர் அடுத்த ஒவரை வீச நம்ம தளபதி ரவிச்சந்திரன் அஷ்வினை அழைத்தர் கேப்டன் விராத் கோலி,
அந்த ஓவரை அற்புதமாக வீசிய அஷ்வின் ஆறாவது பந்தை எதிர் கொண்ட உபுல் தரங்கா முட்டிக்கு மேல் சிறிது எலும்பி வந்த அந்த பந்தை இலகுவாக சொடுக்கி விட்டார், அங்க ஷார்ட் ஃபைன் லெக்கில் ஹெல்மெட்டுடன் குறுகி கையை கீல் நீட்டி நின்றிருந்த கே எல் ராகுலிடம் தரங்கா அடித்த பந்து தானாக வந்து அவர் கைகலுக்கு இடையில் நின்றது அதை அப்படியே ” என்னடா இது திண்ணையில கெடந்தவனுக்கு திடுக்குனு வந்த சான்சுன்ற மாதிரி” பந்தை அப்ப்டியே எடுத்து கொண்டு ஓடி கொண்டாட ஆர்ம்பித்தார் கே எல் ராகுல், இதனை கண்ட விராட் கோலி மற்றும் சக அணி வீரர்கள் ராகுலிம் வந்து விக்கெட்டை கொண்டாட ஆரம்பித்தனர்.
அப்போது, ராகுலிடம் சென்ற விராத் கோலி ஏதொ புதிதாக சில சைகைகளை செய்து விக்கெட்டை கொண்டாடினார். இருவரின் அடுதத்டுத்த கைகளையும் எதிர் எதிராக மாற்றி மாற்றி இலகுவாக தட்டி புதிய வகையான கொண்டாட்டத்தை வெளிபடுத்தினர்.
அந்த வீடியோ இணைப்பு இதோ கீழே :
இரண்டாவது ஓவரில் ரன் ஏதுமே எடுக்காமல் ஒரு விக்கெட்டை இழந்து பரிதாபமாக நின்றது இலங்கை அணி.
பின்னர் தொடர்ந்து ஆடிய இலங்கை அணி மீதம் இருந்த 20 ஓவர்களை ஆடி முடிப்பத்ற்க்குள் சிக்கி சின்னா பின்னமாகியது. அஸ்வினின் சுழழ் வலைக்குல் சிக்கி அவரின் பந்துகளை எதிர் கொள்ள தினறினர். நன்றாக வீசிய அஸ்வின் மேலும் ஒரு விக்கெட்டை சாய்த்தார், அவர் பந்தை எதிர் கொள்ள முடியாமல் தினறிய திமுத் கருணாரத்னே சுழழில் சிக்கி ஃபர்ஸ்ட் ஸ்லிப்பில் இருந்த ரஹானேவிடம் எட்ஜ் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 20 ஓவரில் 50 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்திருந்தது. 3வது நாளான நாளை இருக்கும் 90 ஓவர்களையும் அந்த அணி ஆடியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இல்லை எனில் ஃபாலோ ஆன் ஆக வேண்டும், அல்லது இந்திய வைக்கும் அதிகபட்ச ரன்களை அடிக்க வேண்டும். நாளைய ஆட்டம் மேட்ச் மற்றும் தொடரை வெல்லும் வாய்ப்பை இந்தியவிற்க்கு அளிக்கும். பொருத்திருந்து பார்ப்போம் இந்திய சுழழ் மன்னர்களி சமாளிப்பார்களா இலங்கையர்கள்??.