விரேந்திர சேவாக்கை திட்டினாரா விராட் கோஹ்லி…? கடுப்பில் ரசிகர்கள்
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
இந்த தொடரின் கடைசி போட்டி நடைபெற்று கொண்டிருந்த போதே, ஐ.பி.எல் 2018ம் ஆண்டில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் பெங்களூரில் நடைபெற்றது.
கடைசி டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் (27.01.2018) தான் ஏலமும் நடைபெற்றது. இந்திய வீரர்கள் போட்டியில் கவனம் செலுத்தியது போல் பல்லாயிரம் மைல்கல் கடந்து இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல் ஏலம் குறித்தான் தகவல்களையும் ஒருவருக்கு ஒருவர் மைதானத்திலேயே அவ்வப்போது பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது.
போட்டியின் இடைவேளையின் போது இந்திய வீரர்கள் ஐ.பி.எல் ஏலம் குறித்து பேசிக்கொண்டிருக்கையில் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி சக வீரர்களிடம் “Viru Pa has gone made” சேவாக் அணியை கெத்தாக உருவாக்கி விட்டார் என்று கூறியதாக உடனிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே வேளையில் இன்னும் சிலர் விராட் கோஹ்லி இப்படி கூறவில்லை “Viru Pa has gone mad” அதாவது தேவையில்லாத சில வீரர்களுக்காக சேவாக் ஆலோசகராக இருக்கும் பஞ்சாப் அணி கோடிகளை கொட்டியது குறித்து, தான் “சேவாக் லூசாகிட்டாரா” என்று கோஹ்லி கிண்டலாக பேசியதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்.
இது குறித்தான செய்திகளில் பல்வேறு ஊடகங்களில் வெளியாகி வரும் நிலையில், சேவாக்கின் ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்கள் மூலம் கோஹ்லியை திட்டியும் வருகின்றனர்.
Photo by Ron Gaunt / IPL / SPORTZPICS
ஐ.பி.எல் 2018ம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்காக பெங்களூரில் கடந்த இரு தினங்களாக நடைபெற்ற ஏலத்தில், பஞ்சாப் அணியின் உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தா மிக துடிப்புடன் பல்வேறு வீரர்களை கோடிகளை கொட்டி தனது அணியில் எடுத்து கொண்டதை ரசிகர்கள் பாராட்டினாலும், மற்ற அணிகள் விலை கொடுத்து வாங்க முடியாத அளவிற்கு சில வீரர்களின் தொகையை அதிகரித்து விட்டுவிட்டு அவரும் வாங்காமல் விட்டதை ரசிகர்களில் திட்டியே வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு உதாரணம் உனாட்கட்.