கோலி தலைமையிளான இந்திய அணி அடுத்தடுத்து வரும் அணிகளை வச்சு செய்து கொண்டிருப்பதை நாம் அனைவரும் கண்கூட பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தரவரிசையில் இந்தியா தான் நெ.1.
இந்த அசுரத்தனமான கிரிக்கெட் ஆதிக்கம் எப்போது ஆரம்பித்தது? கடந்த 2015ஆம் ஆண்டு கோலி கையில் வந்தது முழு நேர கேப்டன் பொருப்பு. அப்போது வழிய வந்து மாட்டிய ‘அய்யாசாமி’ இலங்கையை வச்சு செய்து 5-0 என பொட்டி கட்டி அனுப்பினார் விராட் கோலி.
அதிலிருந்த தொடர்ந்து 8 டெஸ்ட் தொடர்கள் மற்றும் 5 ஒருநாள் தொடர்களை வென்றுள்ளது இந்திய அணி. இப்படியாக தனது ஆதிக்க கையை மேநோக்கி தூக்க டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் அனைத்து பழையகால ஜாம்பவான் அணிகளை கீழே தள்ளியது இந்திய அணி.
ஏற்கனவே ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, தற்போது ‘கைப்புள்ள’ அணி ஆஸியையும் வெண்களக் கிண்ணம் கூ கிடையாது என டி20 தொடரையும் கைப்பற்ற மும்மூரமாகி வருகிறது.

தற்போது டி20 தொடருக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ள இந்தியத் துவக்க வீரர் சிகர் தவான் இந்தியா எப்படி நெ.1 ஆக இருக்கிறது போன்ற பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
என்.டி.டீ.வி க்கு அவர் கொடுத்த பேட்டியில் கூறியதாவது,
இந்தியா நெ.1 ஆக இருப்பதற்க்குக் காரணம் நான் பல அனுபவம் வாய்ந்த மற்றும் திறமையான வீரர்களை அணியில் வைத்துள்ளோம். இதன் காரணமாக அனைத்து விதமான போட்டிகளிலும் இந்தியா ஜொலித்து நெ.1 ஆக இருக்க வாய்ப்பளிக்கிறது.
தற்போது இந்திய அணியில் வெளியில் பென்ச்சில் உக்காந்திருப்பவர்களை வைத்தே நாம் இன்னொரு சர்வதேச அணியை உருவாக்கி விடலாம். அப்படி ஒரு கட்டமைக்கப்பட்ட திறமை வாய்ந்த வீரர்கள் நம்மித்தில் உள்ளனர்.