இரண்டாவது டெஸ்ட்டுக்கான பிளையிங் லெவனில் ஷ்ரேயாஸ் ஐயர் இருப்பார் என்று தகவல்கள் வந்திருக்கிறது.
ஆஸ்திரேலியா அணி, இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு முதற்கட்டமாக பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. நாக்பூர் மைதானத்தில் நடந்து முடிந்த முதல் டெஸ்டில் இந்திய அணி பேட்டிங் பௌலிங் இரண்டிலும் அசத்தி ஆஸ்திரேலியாவை படுதோல்வி அடைய வைத்தது.
வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி டெல்லி மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் துவங்குகிறது. அதில் இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். காயம் காரணமாக வெளியில் இருந்த மிட்ச்சல் ஸ்டார்க் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் மீண்டும் அணிக்கு திரும்பவுள்ளார்கள் என்கிற சில தகவல்களும் வந்திருக்கிறது.
அதேபோல் இந்திய அணியிலும் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் பற்றிய மிகமுக்கிய தகவல் வந்திருக்கிறது. நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் டெஸ்ட் தொடரின் போது முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடாமல் இருந்தார்.
ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்குள் வந்துவிடுவார் என கூறப்பட்டது. ஆனால் முதல் டெஸ்ட் போட்டிக்குள் குணமடையவில்லை ஆகையால் அவரால் விளையாட முடியாமல் போனது.
இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு நடந்த உடல்தகுதி பரிசோதனையில் முழு உடல்தகுதியுடன் இருக்கிறார் என்று உறுதியாகிவிட்டது. அவரது முதுகுப்பகுதி காயமும் முற்றிலுமாக குணமடைந்து விட்டது என்று தெரிய வந்திருக்கிறது.
பிசிசிஐ தரப்பிலிருந்து வந்த தகவலின் படி, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் ஷ்ரேயாஸ் ஐயர் இருப்பார் என கூறப்பட்டுள்ளது. இதனால் சூர்யகுமார் யாதவ் வெளியில் அமர்த்தப்படலாம் என்றும் தெரிகிறது. இது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசுகையில்,
“நிச்சயமாக ஷ்ரேயாஸ் ஐயருக்கு முன்னுரிமை இருக்கும். அவருக்கு பிளேயிங் லெவனில் நேரடியாக வாய்ப்பு உண்டு. மிகச்சிறந்த பார்மில் இருக்கிறார். மீண்டும் அணிக்கு வருகையில், அவர் பிளேயிங் லெவலில் இருப்பது தான் சரியாக இருக்கும்.” என்று கூறினார்.
இதிலிருந்து ஷ்ரேயாஸ் ஐயர் 2வது டெஸ்டுக்கான பிளேயிங் லெவனில் இருப்பார் என்று தெரிகிறது.