போட்டியை தலைகீழாக மாற்றிய ஒரு ஓவர்.. இரண்டு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது பஞ்சாப் !! 1

சையத் முஸ்தாக் அலி டிராபின் இன்றைய லீக் போட்டியில் பஞ்சாப் அணி   டெல்லி அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் ரஞ்சிக்கோப்பை தொடரைப்போல டி-20 தொடர் சையது முஸ்தாக் அலி கோப்பை தொடர் நடத்தப்படுவதும் வழக்கம்.

இதில் இந்தியாவின் உள்ளூர் அணிகள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி என ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் பங்கேற்கும்.

இதில் இரண்டாம் நாளான இன்று டெல்லியில் நடைபெற்ற லீக் போட்டியில் காம்பீர் விளையாடும் டெல்லி அணி, யுவராஜ் சிங் விளையாடும் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது.

இதில் டாஸ் வென்ற டெல்லி அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு துவக்கம் கொடுத்த மனோன் வோஹ்ரா போட்டியின் முதல் ஓவரில் இருந்தே எதிரணியின் பந்துவீச்சை  பிரித்து மேய்ந்து 50 பந்துகளில் 6 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் சேர்த்தார்.

போட்டியை தலைகீழாக மாற்றிய ஒரு ஓவர்.. இரண்டு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது பஞ்சாப் !! 2
Yuvraj scores fifty

மற்றொரு துவக்க ஆட்டக்காரரான மந்தீப் சிங் 27 ரன்னிலும்,  அடுத்துவந்த ஆர்மால்ப்ரீட் சிங் 3 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றினாலும் அடுத்து களமிறங்கிய யுவராஜ் சிங், தனது வழக்கமான ஸ்டைலிஷ் ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்து கைகொடுத்ததன் மூலம் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 170 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய டெல்லி அணியின் துவக்க வீரர்களான காம்பீர் 66 ரன்களும், ரிஷப் பண்ட் 38 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தனர்.

போட்டியை தலைகீழாக மாற்றிய ஒரு ஓவர்.. இரண்டு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது பஞ்சாப் !! 3

அடுத்ததாக வந்த ரானா(29) மற்றும் ஹிமாட் சிங்(6) நீண்ட நேரம் நிலைக்கவில்லை.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த லலீத் யாதவ் மற்றும் பவன் நேகியின் போராட்டத்தால், கடைசி ஒரு ஓவருக்கு 13 ரன்கள் தேவை என்ற நிலை டெல்லி அணிக்கு ஏற்பட்டது.

போட்டியை தலைகீழாக மாற்றிய ஒரு ஓவர்.. இரண்டு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது பஞ்சாப் !! 4

போட்டியின் வெற்றியை தீர்மானிக்கும் அந்த கடைசி ஓவரை வீசிய பவன் நேகி தனது சாதூர்யமான பந்துவீச்சு மூலம் பஞ்சாப் அணிக்கு 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றுத்தந்தார்.

இந்த போட்டியில் ஏற்பட்ட பரபரப்பை விட, காம்பீர் மற்றும் யுவராஜ் சிங் அரைசதம் அடித்து அசத்தியிருப்பதை இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

அதே போல் காம்பீர் மற்றும் யுவராஜ் சிங், இந்திய அணியில் ஏன் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published.