இந்திய அணி இன்று இரவு நியூசிலாந்து அணியுடனான முதல் டி20 போட்டியில் டெல்லி ஃபெரோசா கோட்லா மைதானத்தில் விளையாடவுள்ளது. இந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு கடந்த வாரம் அணி அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் ஆச்சரியமாக புது முகங்கள் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் முகமது சிராஜ் வேக்பந்து வீச்சாளர் இவருடைய தந்தை ஒரு ஆட்டோ ட்ரைவர் ஆவர். கடந்த வருடம் ஐ.பி.எல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடிய சிராஜ் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். அப்போது வரை முகமது சிராஜ் என்ற ஒரு உயரமான பந்து வீச்சாளர் இருப்பது யாருக்கும் தெரியாது.
சன் ரைசர்ஸ் அணிக்காக ஆடிய அவர்., தொடர்ச்சியாக, மணிக்கு 140+ கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய வல்லமை படைத்தவர்.பின்னர் உள்ளூர் போட்டிகளில் நன்றாக் ஆடிய முகமது சிராஜ் தேசியத் தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்த்தார். தற்போது இந்தியாவின் டி20 அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் சிராஜ்.
ஒரு ஆட்டோ ட்ரைவரின் மகனாக இருந்து சன் ரைசர்ஸ் அணிக்காக ஆடி பின் இந்திய அணியில் இடம் பிடித்தது பற்றி அவர் கூறும் போது,
நான் சன் ரைசர்ஸ் அணியில் நெஹ்ராவுடன் விளையாடி இருக்கிறேன். ஒவ்வொரு போட்டிக்கு முன் அவர் எனக்கு பல அறிவுரைகள் மற்றும் ஆட்டத்தின் நேக்குகளை கூறுவார். அந்த ஆட்டத்திறன்கள் எனக்கு போட்டியின் போது மிகௌவ்ம் உதவின.
அவர் எப்போதும் 20 வருடம் கிரிக்கெட் ஆடியது போல் காட்டியதில்லை. அவர்டைய தம்பியைப் போல் என்னை பார்த்துக்கொள்வார். ஒரு பேட்ஸ்மேனுக்கி நமது பந்து வீச்சு நேக்கால் எப்படி விளையாட்டு காட்டுவது என எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்.

சரியாக பந்தை பிடித்து, பேட்ஸ்மேனின் நகர்வுகளை எப்போதும் கனித்துக்கொண்டே இருக்க வேண்டும், பின்னர் அதற்கேற்றார் போல் பந்தினை மாற்றி வீச வேண்டும் என, குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பது போல் எனக் கற்றுக்கொடுப்பார்.
அவருடைய உற்சாகமான பேச்சு எனது ஆட்டத்திறத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. ஒரு பேட்ஸ்மேனின் மனதை எப்படி படிப்பது என எனக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார் நெஹ்ரா.
மேலும், இவருடைய முதல் சர்வதேச டி20 போட்டி குரு நெஹ்ராவின் கடைசி சர்வதேச போட்டியாக அமைந்துவிட்டது என்பது பற்றியும் கூறினார்.
20 வருடம் கிரிக்கெட் வாழ்க்கையில் பயணிக்க நிறைய தியகங்களை செய்ய வேண்டும். அதனை நெஹ்ரா செய்துள்ளார். அவருக்கு ஒரு சிறந்த பிரியாவிடையைக் கொடுக்க வேண்டும். முதல் டி20 (நவ்.1) போட்டியில் நான் விளையாடுவேன என்பது பற்றி தெரியவில்லை, அப்படி வாய்ப்பு கிடைத்தால் அது என் வாழ்வில் மிக முக்கியமான தருணமாக இருக்கும்.
இந்தியாய்ன் ஜெர்சியை அணிந்து விளையாடுவது பெருமமதிப்பிற்குறியதாகும். என்னுடைய ஃபேவரட் கேப்டன் கோலி தலைமையில் விளையாவது எனக்கு இன்னும் மகிழ்ச்சி.