ஜாஹிர் கான் ஒப்பந்த விவரங்களை பற்றி கூறிய சவுரவ் கங்குலி

இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான ஜாஹீர் கானின் ஒப்பந்தத்தை பற்றி கேள்விகள் எழுந்த போது, கிரிக்கெட் நிர்வாகி குழுவில் ஒருவரான சவுரவ் கங்குலி, ஜாஹீர் கானின் ஒப்பந்தம் வருடத்திற்கு 150 நாள் என கூறினார்.

“வருடத்திற்கு 150 நாளுக்கு ஜாஹீர் கான் ஒப்பந்தம் செய்தார்,” என ஈடன் கார்டனில் சவுரவ் கங்குலி கூறினார்.

ஜூன் 11 அன்று இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமித்தது இந்திய கிரிக்கெட் வாரியம். அவருடன் ஜாஹீர் கான் மற்றும் ராகுல் ட்ராவிடையும் நியமித்தது பிசிசிஐ. முழு நேர பந்து வீச்சு பயிற்சியாளராக ஜாஹீர் கானும், சில முக்கியமான சுற்று பயணத்திற்கு பேட்டிங் ஆலோசனையாளராக ராகுல் ட்ராவிடும் இருப்பார் என பிசிசிஐ கூறியது. ஆனால், சில முக்கியமான சுற்று பயணத்திற்கு மட்டும் தான் பந்துவீச்சு ஆலோசனையாளராக ஜாஹீர் கான் இருப்பார் என பிசிசிஐ உறுதி படுத்தியது.

“பயிற்சியாளராக ரவி சாஸ்திரி, பந்துவீச்சு ஆலசோனையாளராக ஜாஹீர் கான் மற்றும் முக்கியமான சுற்று பயணத்திற்கு பேட்டிங் ஆலோசனையாளராக ராகுல் டிராவிட் செயல் படுவார்கள் என பிசிசிஐ அறிவித்தது.”

ஆனால், ஜாஹீர் கான் பகுதி நேர பயிற்சியாளராக தான் செயல் படுவார் என இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி படுத்தியது. இதனால், 100 நாள் கூட இந்திய அணியுடன் இருக்கமாட்டார் என தகவல் வந்தது, ஆனால் அவர் இந்திய அணியுடன் 150 நாளுக்கு ஜாஹீர் கான் ஒப்பந்தம் செய்துள்ளார் என கங்குலி தெரிவித்தார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.