கதை என்ன?
வெஸ்ட் பெங்கால் மாநிலத்தில் தென் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலியின் சிலை அரசியல் பிரச்சனை காரணத்தினால் அகற்றப்பட்டது.
ஒருவேளை உங்களுக்கு தெரியவில்லை என்றால்…
சனிக்கிழமை அன்று மேற்கு வங்க மாநிலம் தினாஜ்பூர் மாவட்டத்தில், முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் கங்குலி தன்னுடைய வெண்கலச்சிலையை தானே திறந்து வைத்துள்ளார்.
Looks like me …?? pic.twitter.com/ka4VHJl9ow
— Sourav Ganguly (@SGanguly99) July 15, 2017
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர், முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலி. இந்திய கிரிக்கெட்டை அடுத்த லெவலுக்கு எடுத்துச்சென்ற கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.
விவரங்கள்:
கொல்கத்தாவின் ராஜ குடும்பத்தை சேர்ந்த இவரை அங்குள்ள மக்கள் இன்றும் இளவரசராகவே பார்க்கின்றனர். தவிர, இவரை ‘தாதா’ என மக்கள் செல்லமாக அழைப்பதும் வழக்கம். கிரிக்கெட்டில் இருந்து இவர் ஓய்வு பெற்ற பின், மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உள்ள இவர், இந்திய கிரிக்கெட் சங்கத்தின் ஆலோசனைக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.
இவருக்காக மேற்கு வங்க மாநிலம் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பிகாஷ் மைதானத்தில் சுமார் 8 அடி உயரத்தில் வெண்கலச்சிலை அமைக்கப்பட்டிருந்தது. இதை கங்குலியே திறந்து வைத்தார்.
அடுத்தது என்ன?
அந்த சிலை வைக்கப்போகும் செய்தியை அங்கிருக்கும் கட்சிகளுக்கு தெரிவிக்காததால், இரு கட்சிக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்றது. இதனால், அந்த சிலையை அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருக்கும் மக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.