ஒத்துக்கிறோம் இந்த பிட்ச் ரொம்ப மோசம் தான்; உண்மையை ஒப்பு கொண்டது ஐ.சி.சி
இந்தியா தென் ஆப்ரிக்கா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற வாண்டரர்ஸ் ஆடுகளம் மோசமானது தான் என்று ஐ.சி.சி., தெரிவித்துள்ளது. ஆனால் அந்த மைதானத்தில் இனி கிரிக்கெட் விளையாடுவதற்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லை.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை இழந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
மூன்றாவது போட்டி நடைபெற்ற ஜோகன்ஸ்பெர்க் ஆடுகளமான விளையாடுவதற்கு ஏற்ப இல்லை என்றும், பந்து எக்கு தப்பாக எகிறுவதால் பயமாக உள்ளதாகவும் வீரர்கள் பலர் போட்டி நடைபெற்ற போதே குற்றம் சாட்டினர். ஆனால் போட்டி அம்பயர்களில் ஆய்வுக்கு பிறகு போட்டி தொடர்ந்து நடைபெற்றது. வீரர்களும் ஒரு வழியாக உயிரை கையில் பிடித்து கொண்டு விளையாடியது போல் விளையாடி போட்டியை நிறைவும் செய்தனர்.

இந்நிலையில் இது குறித்து ஆய்வு செய்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி), இது மோசமான பிட்ச் தான் என்று ஒப்புக்கொண்டு, இந்த ஆடுகளத்திற்கு தடைக்கான மூன்று புள்ளிகளையும் வழங்கியுள்ளது.
இந்த மைதானத்தின் மீதான புகார் தொடர்ந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இந்த மூன்று புள்ளியானது ஐந்து புள்ளிகளாக மாறினால், ஜோஹன்ஸ்பெர்க் மைதானத்தின் மீது தடை விதிக்கப்படும்.