பல மில்லியன் கணக்கான மக்களை ஈர்த்த போட்டிகளில் கிரிக்கெட்டும் ஒன்று என்றால் யாராலும் மறுக்க முடியாத ஒன்று. உங்கள் நாட்டுக்காக விளையாடி வெல்ல வேண்டும் என்று தான் ஒவ்வொரு வீரனும் களமிறங்கி போராட துடிப்பான். அதிலும் நாட்டுக்காக வென்று கொடுத்தால் நிச்சயம் பெருமிதம் கொள்ள வைக்கும் அல்லவா. சில நேரங்களில் மக்கள் மனதை வென்ற சம்பவங்களும் இங்கு நிகழ்ந்துள்ளன. அவற்றில் மிக முக்கியமான நிகழ்வுகளை நாம் இங்கு பார்க்க இருக்கிறோம்.
1. பிரேட்லீ க்கு பிலின்டாஃப் ஆறுதல் கூறியது..
ஆஷஸ் தொடர் என்றால் ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே அனல் பறக்கும் போட்டியாக இருக்கும். வெறி என்று கூட சொல்லலாம். 2005ம் ஆண்டு நடந்த ஆஷஸ் தொடரில் மயிரிலையில் ஆஸ்திரேலியா அணி தோல்வியை கண்டது. வெறும் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தனது கடைசி விக்கெட்டை இழந்தார் பிரெட்லீ. அப்பொழுது பிலின்டாஃப் உடனடியாக பிரெட்லீ அருகில் சென்று ஆறுதல் கூறினார். இது அவருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆஸ்திரேலியா மக்களுக்கும் ஆறுதலாக அமைந்தது.