முன்னதாக :
இந்திய இலங்கை அணியை துவம்சம் செய்து வரலாறு படைத்துள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற வெற்றிக்கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியுன் மூலம் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் தனது 7வது வெற்றியை பதிவு செய்தார். மேலும் இந்திய அணி தொடர்ந்து அவர் தலைமையில் வெற்றி பெரும் 8வத் தொடராகும்.
போட்டிக்கு பின்னர் பரிசளிப்பு விழாவில் பேசிய விராட் கோலி மும்பை பாண்டியை புகழ்ந்து தள்ளினார். பாண்ட்ய தான் 3வது டெஸ்ட் இன் ஆட்ட நாயகன் ஆவார்.
3 போட்டிகளில் விளையாடியுள்ள பாண்ட்யா, 108 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 59.3 சராசரியிலும் 178 ரன்கள் அடித்துள்ளார். இதில் ஒர் சதம் மற்றும் ஒரு அரை சதம் அடங்கும்.
பந்து வீச்சிலும் அசத்தியுள்ளார் பாண்ட்யா. தனது பங்கிற்க்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இத்தனைக்கும் அவர் 3 டெஸ்ட் போட்டியிலும் சேர்த்து 32 ஒவர்கள் மட்டுமே வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற ஒரு வெற்றிக்கு காரணம் ஹர்திக் பாண்ட்யா தான். அவர் அணிக்கு வந்தது எங்கள் அனைவருக்கும் உற்ச்சாகமாக அமைந்துள்ளது. அனைவரது செயல்பாடும் இந்த தொடரில் மிக அருமையாக இருந்தது. இது போன்ற நெருக்கடி இல்லாத ஒரு வெற்றியை பெறுவதற்க்கு எப்போதும் நன்றாகத்தான் இருக்கும். எப்போதும் அணியை காப்பவர்கல் நன்றாக செயல்பட்டனர். அதுபோக பாண்ட்யாவின் வரவு எங்களுக்கு இன்னும் வலு சேர்த்தது. அவர் பேட்டிங்கில் பொறுப்புடனும், பந்து வீச்சில் நம்பிக்கையுடனும் செயல் பட்டார். அது எங்களுக்கு மேலும் உற்ச்சாகத்தை கொடுத்ட்தது.
இன்று மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி தொடக்க முதலே சரிவை கண்டது. இந்தியாவும் வெகு சீக்கிரமாக தனது வெற்றியை பதிவு செய்ய இலங்கையை விளிம்பில் தள்ளும் வண்ணம் ஆடியது. இலங்கையின் மீது தனது ஆதிக்கத்தை செலுத்தியது.

நாங்கள் ஒரு நல்ல டெஸ்ட் அணியாக உருவெடுத்துள்ளோம். மேலும் , டெஸ்ட் கிரிக்கெட் ஆட விரும்புகிறோம். ஒவ்வொரு டெஸ்ட் போட்டியையும் எங்களது முதல் டெஸ்ட் போட்டியை போல் தான் நினைத்து ஆடுகிறோம். அது தான் எங்களை இரக்கமற்ற முறையில் எதிர் அணியை எதிர் கொள்ள உதவும்.
இலங்கையை பற்றி கோலியிடம் கேட்ட போது , அவர் கூறியதாவது ,
நாங்கள் ஒரு இளம் டெஸ்ட் அணி, நாங்கள் ஒரே அணியாக இன்னும் 5 அல்லது 6 ஆண்டுகள் ஆட வாய்ப்புள்ளது. இலங்கை அணியில் உள்ள அனைத்து வீரர்களும் மிகத்திறமையானவர்கள். அதனால் தான் அவர்கள் நாட்டுக்காக ஆடுகின்றனர். அவர்கள் ஒரே அணியாக ஆஸ்திரேலிய அணியை 3-0 வில் வென்றுள்ளதை நாம் மறக்க கூடாது.
எதுவானாலும் நம் நம்பிக்கையில் தான் உள்ளது.அணியின் தோல்வி காரணமாக உற்ச்சாகத்தை இழக்காமல் இருப்பதே சிறந்தது. ஓர் அணியாக அதுதான் நமக்கு தேவை.
என் முடித்தார்.