விராட் கோலி அடிச்ச செஞ்சுரி எல்லாம் ஒன்னுமே கிடையாது.. இலங்கை பவுலிங் வேஸ்ட் – வித்தியாசமாக பேசி ரசிகர்களிடம் வாங்கிகட்டிக்கொண்ட கம்பீர்!

விராட் கோலி, ரோஹித், கில் ஆகியோர் நன்றாக விளையாடியதை பாராட்டாமல், ஒன்றுமே கிடையாது என கடுப்பாக பேசியுள்ளார் கௌதம் கம்பீர்.

கௌகாத்தி மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக கில் மற்றும் ரோகித் இருவரும் களமிறங்கினர்.

ரோகித் சர்மாவிற்கு இந்த தொடர் மிகவும் முக்கியமாகும். ஏனெனில் இதற்கு முன்னர் மோசமான ஃபார்மில் இருந்தார். ஓய்விலிருந்து வந்து சிறப்பாக விளையாடினார்.

கில்-ரோகித் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 143 ரன்கள் சேர்த்தது. கில் 60 பந்துகளில் 70 ரன்களும் ரோகித் சர்மா 83 ரன்களும் அடித்து ஆட்டம் இழந்தனர்.

அடுத்து வந்த விராட் கோலி வங்கதேச அணியுடன் அடித்த சதத்தின் ஃபார்மை மீண்டும் தொடர்ந்தார். இப்போட்டியிலும் சதம் விளாசி ஒருநாள் போட்டிகளில் 45ஆவது சதத்தையும், ஒட்டுமொத்தமாக 73ஆவது சதத்தையும் பூர்த்தி செய்தார். இந்த சதத்தின் மூலம் சச்சின் டெண்டுல்கரின் பல சாதனைகளையும் முறியடித்துள்ளார்.

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 373 ரன்கள் அடித்தது. மிகப்பெரிய இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு கேப்டன் ஷனக்கா 108* ரன்களும், துவக்க வீரர் பதும் நிஷன்கா 72 ரன்களும் அடிக்க, 50 ஓவர்களில் 306/8 ரன்கள் மட்டுமே அடித்தது. இந்தியா 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.

இந்திய அணியின் துவக்க ஜோடி ரோகித் சர்மா-கில் மற்றும் சதமடித்த விராட் கோலி ஆகியோரை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த தருணத்தில் இவர்கள் விளையாடியது ஒன்றுமே கிடையாது இலங்கையின் பௌலிங் சரியில்லை. அதனால் தான் அடித்திருக்கிறார்கள் என வித்தியாசமாக பேசி பல ரசிகர்களின் கோபத்தை தூண்டியுள்ளார் கௌதம் கம்பீர். அவர் பேசியதாவது:

“இன்று இலங்கை அணி பந்து வீசியது சர்வதேச தரத்தில் இல்லை. இதன் காரணமாக ரோகித், கில் மற்றும் விராட் கோலி ஆகிய டாப் 3 வீரர்கள் நிறைய ரன்கள் அடித்துவிட்டனர். குறிப்பாக கில் மற்றும் ரோகித் இருவருக்கும் மிகவும் ஈசியாக ரன்கள் வந்துவிட்டது. எந்த ஒரு கஷ்டமும் படவில்லை. இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இலங்கை அணியின் பந்துவீச்சு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது. விராட் கோலியும் அவரது பெஸ்ட்டை கொடுக்கவில்லை. நிறைய தவறுகள் அவரது பேட்டிங்கில் இருந்தது. 2, 3 முறை ஆட்டமிழக்க வேண்டியது. தப்பித்துவிட்டார்.” என்று கம்பீர் பேசினார்.

கௌதம் கம்பீரின் இந்த பேச்சிற்கு ரசிகர்கள் கடுமையாக கமெண்ட் அடித்து வருகின்றனர். ஏனெனில் அவர்களும் உலக தரமிக்க பவுலர்கள் தான். அதேபோல் நமது பேட்ஸ்மேன்களும் நன்றாக விளையாடினர். இதை புரிந்து கொள்ளாமல் இப்படி பேசுகிறாரே என்கிற கோபத்தின் வெளிப்பாடு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

ஒவ்வொரு முறை இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடும் பொழுதும் கம்பீர் இப்படி வித்தியாசமான கருத்துக்களை கூறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அதேபோல் இம்முறையும் பேசி ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார்.

Mohamed:

This website uses cookies.