கடந்த 15 வருடங்களுக்கு முன் இந்திய அணியின் சிறந்த வீரர்களக விளங்கியவர்கல சச்சின் மற்றும் ஹர்பஜன் சிங். அவரவர் நிலைகளில் ஆஸ்திரேலிய அணிக்கு சிம்மப சொப்பனமாக திகழ்ந்தவர்கள் இருவரும்.
தற்போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருக்கும் ஸ்டீவ் ஸ்மித்திடம் நிரூபர்கள் கேட்ட கேள்விக்கு அவர், இந்த இருவர் பெயரையும் தான் குறிப்பிட்டிருக்கிறார்.

(PTI9_20_2017_000160B)
அவர் இந்தியன் வர்த்தக சபையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தபோது ஸ்மித் கூறியதாவது,
இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கான போட்டி என்பது ஒரு மிகப்பெரிய போட்டியுணர்வாகும். ஒரு கேப்டனாக இந்தியாவில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற நினைப்பது மகத்தானது.
இந்தியாவிள் விளையாடுவது ஒரு மிகக் கடுமையான போட்டி மிகுந்த இடமாகும். ஆடுகளங்கள் இங்கு மிகவும் மாறுபடுகின்றன. அதே போல் தான் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளும் இருக்கப் போகிறது.

Australia’s captain Steve Smith during a training session
Action Images via Reuters / Philip Brown
Livepic
மேலும், ஒரு சில அணிகள் நன்றாக முன்னேற்றம் அடைந்து வருகின்றன. தற்போது பார்த்தால் வங்கதேச அணி முதல் டெஸ்ட் போட்டியில் எங்கள் அணியை வீழ்த்திவிட்டது. அதே போல், ஆப்கானிஸ்தான் அணியும் திறமை வாய்ந்த வீரர்களை உறுவாக்கி வருகின்றது.
ஐ.பி.எல் தொடரில் ஆப்கானிஸ்தானி ரசிட் கான் எவ்வளவு அருமையாக செயல்பட்டர் எனபதை நாம் அனைவரும் பார்த்தோம். கிரிக்கெட்ட்டில் நன்ராக விளையாடும் அனைவருக்கும் இடம் உள்ளது.
ஒவ்வொரு ஃபார்மட் கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவதும் எனக்கு பிடிக்கும் டெஸ்ட் போட்டிதான் அதில் சிறந்த போட்டி. நீண்ட நேரம் பேட்டிங் செய்வது தான் உண்மையான சோதனை ஆகும்.
எனக் கூறினார்
ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. சென்னையில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்னும் சற்று நேரர்த்தில் துவங்கவுள்ளது.
முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 87 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்த போதிலும், அதன் பிறகு டோனி (79 ரன்), ஹர்திக் பாண்ட்யா (83 ரன்) ஆகியோரின் அபார ஆட்டத்தால் தலைநிமிர்ந்தது. 2-வது இன்னிங்சில் மழை குறுக்கிட்டதால் 21 ஓவர்களாக குறைக்கப்பட்ட ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ‘சரண்’ அடைந்தது.
குறிப்பாக கை மணிக்கட்டை அதிகமாக பயன்படுத்தி சுழற்பந்து வீசுவதில் கைதேர்ந்த யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை மிரட்டினர். இன்றைய ஆட்டத்திலும் அவர்கள் தான் பிரதான அஸ்திரங்களாக இருப்பார்கள். கடந்த சில ஆட்டங்களில் சரிவர சோபிக்காத ரஹானே, பார்முக்கு திரும்பாவிட்டால் இடத்தை இழக்க நேரிடும் என்பதால் ரன் குவிக்க முயற்சிப்பார். மற்றபடி வலுவான நிலையில் திகழும் இந்திய அணி வெற்றிப்பயணத்தை தொடருவதில் தீவிரம் காட்டும்.
சுழற்பந்து வீச்சாளர் 22 வயதான குல்தீப் யாதவ் கூறுகையில், ‘சென்னை ஆட்டத்தில் ஆஸ்திரேலிய துணை கேப்டன் டேவிட் வார்னரின் விக்கெட்டை கைப்பற்றினேன். எனது பந்து வீச்சை எதிர்கொள்ளும் போது அவர் நிறைய நெருக்கடியில் இருப்பார் என்று நினைக்கிறேன்.
இதுவே, அவரை எந்த நேரத்திலும் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை எனக்கு தருகிறது. எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை. அவருக்கு எதிராக உற்சாகமாக பந்து வீசுகிறேன். சரியாக திட்டமிட்டு பந்து வீசினால் அவரை சீக்கிரம் வீழ்த்தி விட முடியும்’ என்றார்.