ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா இடம் பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர், ஆனால் யோ-யோ தேர்வில் சுரேஷ் ரெய்னா பெய்ல் ஆகிவிட்டார். அந்த தேர்வில் அவர் பெய்ல் ஆகிவிட்டார், இதனால் அணி தேர்வாளர்கள் அவரை கண்டுகொள்ளமாட்டார்கள் என தகவல்கள் வந்தன.
இன்னொரு நட்சத்திர வீரர் அமித் மிஸ்ராவும் அந்த தேர்வில் பெய்ல் ஆகி விட்டார். அந்த தேர்வு முடிந்த பிறகு, ரிசல்ட்டை அறிவித்தார்கள், அதில் பெய்ல் ஆனார் அமித் மிஸ்ரா.
இதற்கு முன் ஒரு முறை யோ-யோ தேர்வில் பெய்ல் ஆன சுரேஷ் ரெய்னா மீண்டும் பெய்ல் ஆனார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கு தேர்வாகாத சுரேஷ் ரெய்னா, டி20 தொடருக்கான இந்திய அணியிலாவது இடம் பிடிப்பார் என்று அனைவரும் நினைத்து கொண்டிருந்தார்கள். ஆனால், யோ-யோ தேர்வில் பெய்ல் ஆனதால், டி20 தொடருக்கான இந்திய அணியிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
உடல் பரிசோதனை ரிசல்ட் வரும் வரை இந்திய அணியின் தேர்வாளர்கள் இந்திய அணியை அறிவிக்க தாமதம் செய்தனர். அந்த ரிசல்ட் வந்த பிறகு அக்டோபர் 1, இரவு நேரத்தில் இந்திய அணியை அறிவித்தார்கள்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 அணியில் சுரேஷ் ரெய்னாவுக்கு இடம் கிடைக்க வில்லை, இதனால் இந்திய அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கு இடம் கிடைத்தது.
தமிழ் நாட்டை சேர்ந்த இளம் வீரர் வாஷிங்க்டன் சுந்தரும் இந்த யோ-யோ தேர்வில் பெய்ல் ஆனார். ஐபில், துலீப் டிராபி என தொடர்களில் சிறப்பாக விளையாடிய வாஷிங்க்டன் சுந்தர், பெய்ல் ஆனது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.