ஆப்பு கன்னுக்கு தெரியாது...இனி இது எல்லாம் நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு செல்ல முடியும் !! 1
ஆப்பு கன்னுக்கு தெரியாது…இனி இது எல்லாம் நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு செல்ல முடியும்

அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான எஞ்சியுள்ள வாய்ப்புகள் குறித்து இங்கு பார்ப்போம்.

நடப்பு டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி, தனது முதல் போட்டியிலேயே இந்திய அணியை எதிர்கொண்டது.

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் நன்றாகவே செயல்பட்ட பாகிஸ்தான் அணி, விராட் கோலியின் மிரட்டல் பேட்டிங்கால் கடைசி பந்தில் தோல்வியை சந்தித்தது.

பாகிஸ்தான் அணி

இதன்பிறகு தனது இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணியை வெறும் 130 ரன்களில் சுருட்டியது. பந்துவீச்சில் பிரமாதமாக செயல்பட்டு ஜிம்பாப்வே அணியை 130 ரன்களில் சுருட்டிய பாகிஸ்தான், பேட்டிங்கில் மிக மிக மட்டமாக செயல்பட்டு, முதல் போட்டியை போலவே இரண்டாவது போட்டியிலும் கடைசி பந்தில் தோல்வியடைந்தது.

பாகிஸ்தான் அணி இடம்பெற்றுள்ள க்ரூப் 2 பிரிவில் இந்திய அணி இரண்டு போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதே போல் தென் ஆப்ரிக்கா அணி 3 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இரண்டு இடத்தில் இருக்கும் இரு அணிகளும் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்வதே இனி சந்தேகம் தான் என்ற நிலைமையே தற்போது நிலவி வருகிறது.

ஆப்பு கன்னுக்கு தெரியாது...இனி இது எல்லாம் நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு செல்ல முடியும் !! 2

பாகிஸ்தான் அணி இனி அரையிறுதிக்கு செல்வது கடினம் தான் என்றாலும், பாகிஸ்தான் அணி அரையிறுதி தகுதி பெறுவதற்கு எஞ்சியுள்ள வாய்ப்புகள் குறித்து இங்கு பார்ப்போம்.

முதலாவதாக பாகிஸ்தான் அணி எஞ்சியுள்ள மூன்று போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றாக வேண்டும். எஞ்சியுள்ள மூன்று போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் பாகிஸ்தானிற்கு 6 புள்ளிகள் கிடைக்கும். பாகிஸ்தானிற்கு எஞ்சியுள்ள மூன்று போட்டிகளில் ஒரு போட்டி தென் ஆப்ரிக்காவுடன் என்பதால் மூன்று போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றி பெறுவது சந்தேகம் தான்.

பாகிஸ்தான் அணி

ஒருவேளை பாகிஸ்தான் அணி மூன்று போட்டியிலும் வெற்றி பெற்றாலும் நேராக அரையிறுதி சுற்றுக்குள் கால் பதித்துவிட முடியாது. அது இனி இந்திய அணி கையிலும், தென் ஆப்ரிக்கா அணி கையிலுமே உள்ளது. அடுத்த வரும் போட்டிகளில் இந்த இரு அணிகளின் விளையட்டே பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பை தீர்மானிக்கும். சூப்பர் 12 சுற்று முடிவில் இரு அணிகளுமே 6 புள்ளிகளுக்கு மிகாமல் இருந்தாலும், பாகிஸ்தான் அணி எஞ்சியுள்ள மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் பாகிஸ்தான் அணிக்கு எதாவது நல்லது நடக்கும்.

என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *