யுஸ்வேந்திர சாஹல், சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம்… ரிங்கு சிங், கே.எல் ராகுல் இல்லை; டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
எதிர்வரும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., அறிவித்துள்ளது.
சர்வதேச டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் மாதம் துவங்க உள்ளது.
டி.20 உலகக்கோப்பை தொடருக்கான தங்களது அணிகளை அறிவிக்க ஐசிசி., இன்றே கடைசி நாளாக அறிவித்திருந்த நிலையில், டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை, இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ., தற்போது அறிவித்துள்ளது.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ருத்துராஜ் கெய்க்வாட், கே.எல் ராகுல் போன்ற சில வீரர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங்கிற்கும் அணியில் இடம் கொடுக்கப்படவில்லை, ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் ரிங்கு சிங்கின் பெயர் இடம்பெற்றுள்ளது.
டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சனும், ரிஷப் பண்ட்டும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், சிவம் துபே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சுழற்பந்து வீச்சாளர்களாக குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹலும், வேகப்பந்து விச்சாளர்களாக முகமது சிராஜ், பும்ராஹ் மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோரும் டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
ரிசர்வ் வீரர்களாக ரிங்கு சிங்குடன், சுப்மன் கில், கலீல் அஹமத் மற்றும் ஆவேஸ் கான் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி;
ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஸ்தீப் சிங், பும்ராஹ், முகமது சிராஜ்.
ரிசர்வ் வீரர்கள்; சுப்மன் கில், ரிங்கு சிங், ஆவேஸ் கான், கலீல் அஹமத்.