தென்னாப்பிரிக்க கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் தேர்வு இன்று நடக்கிறது.

Photo by Ron Gaunt / BCCI / SPORTZPICS
இந்திய கிரிக்கெட் அணி, தற்போது இலங்கை அணியுடன் விளையாடி வருகிறது. இதையடுத்து தென்னாப்பிரிக்கா சென்று விளையாட இருக்கிறது. மூன்று டெஸ்ட் போட்டிகள், ஆறு ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டி என நீண்ட இந்த தொடருக்கான இந்திய அணி நவ.27 தேர்வு செய்யப்பட இருந்தது. ஆனால், அது தள்ளி வைக்கப்பட்டு இன்று நடக்கிறது.
இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பியிருக்கிற ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டிருப்பதால் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் தவான், ராகுல், முரளி விஜய் ஆகியோர் சிறப்பாக ஆடி வருவதால் யாரை தேர்வு செய்வது என்பதில் அணி நிர்வாகம் குழப்பத்தில் உள்ளது. இருந்தாலும் முந்தைய போட்டியில் முரளி விஜய் அபாரமாக ஆடியுள்ளதால் அவரை தவிர்க்க முடியாது. இதனால் ராகுலுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

In the latest development, ahead of three-match Test series, Sri Lanka has had to face a massive blow, as its newly-appointed skipper Dinesh Chandimal has been ruled out of the first Test against India on Friday owing to pneumonia,
வேகப்பந்துவீச்சைப் பொறுத்தவரை, புவனேஷ்வர்குமார், ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இலங்கை தொடருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அணிக்கு திரும்புகிறார். ஒரு நாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வரும் யார்க்கர் ஸ்பெஷலிஷ்ட் பும்ராவுக்கு தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் ஆட வாய்ப்பு கிடைக்கலாம் என தெரிகிறது.

குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் எனவும் விக்கெட் கீப்பராக சாஹா இருந்தாலும் பார்த்திவ் பட்டேலும் தேர்வு செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரஹானே இலங்கைக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆட வில்லை என்றாலும் வெளிநாடுகளில் அவரது ஸ்டிரைக் ரேட் அபாரமாக இருப்பதால் அவர் அணியில் சேர்க்கப்படுகிறார்.