டெஸ்ட் போட்டிகளில் பும்ரா இதனால் தான் தேர்வானார் : தேர்வுக்குழு தலைவர்

அடுத்த வருட துவக்கத்தில் நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்க தொடருக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்பிரிட் பும்ரா ஏன் தேர்வு செய்யப்பட்டார் என தேவருக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் குறிப்பிட்டு உள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. அத்துடன், இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா இடம்பிடித்துள்ளார். இதுவரை 28 ஒருநாள் போட்டிகள், 30 டி20 போட்டிகளில் பங்கேற்ற அவர், டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது இது முதல் முறையாகும். அத்துடன், விக்கெட் கீப்பர் பார்திவ் படேல், ஆல் ரவுண்டர் ஹார்திக் பாண்டியா ஆகியோரும் டெஸ்ட் அணிக்குத் திரும்பியுள்ளனர்.
இந்த அணிக்கு 7 பேட்ஸ்மேன்கள், 7 பந்துவீச்சாளர்கள், ஒரு ஆல்ரவுண்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் வரும் ஜனவரி 5-ஆம் தேதி தொடங்குகிறது.

தென் ஆப்பிரிக்க தொடருக்கான டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்ய ரஹானே (துணை கேப்டன்), லோகேஷ் ராகுல், ஷிகர் தவன், முரளி விஜய், சேதேஷ்வர் புஜாரா, ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ரித்திமான் சாஹா, பார்திவ் படேல், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஹார்திக் பாண்டியா.

ஜஸ்ப்பிரிட் பும்ரா இந்த வருட துவக்கத்தில் இருந்து சர்வதேச போட்டிகளில் அற்புதமாக ஆடிபவருகிறார். சென்ற வருடம் ஆஸ்திரேலியாவுடனான டி20 தொடரில் அறிமுகமான பும்ரா தற்போது வரை அற்புதமாக பந்து வீசி வருகிறார். அவரது வித்யாசமான பந்து வீச்சு ஆக்சன் மற்றும் துல்லியமான பந்து வீச்சு அவரை சர்வதேச அளவில் ஒரு சிறந்த பந்து வீச்சாளராக மாற்றியுள்ளது. டி20 போட்டிகளைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளிலும் கலங்கினார் பும்ரா. இந்த வருடத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் பும்ரா இரண்டாவது இடத்தில் உள்ளார். மேலும், கதந்த இரண்டு வருடங்களாக உள்ளூர் தொடரிலும் பந்து வீசி வருகிறார். இவரது வித்யாசாமான ஆக்சன் காரணமாக இவரால் நீண்ட காலம் பந்து வீச இயலாது எனக் கூறிவந்தனர் பலர். இதனால் டெஸ்ட் போட்டிகளில் அவரை தொடர்ந்து பந்து வீச இயலாது எனவும் நினைத்தனர் ஆனால் அதனை எல்லாம் தகர்த்து இந்தியாவின் டெஸ்ட் அணியிலும் இடம் பிடித்துள்ளார் பும்ரா.

இது குறித்து இந்திய தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் கூறியாதாவது,

Indian cricketer Jasprit Bumrah (L) celebrates after taking the wicket of Sri Lanka’s Niroshan Dickwella during the 2nd One Day International cricket match between Sri Lanka and India at the Pallekele international cricket stadium at Kandy, Sri Lanka on Thursday 24 August 2017. (Photo by Tharaka Basnayaka/NurPhoto via Getty Images)

கடந்த 18 மாதங்களாக ஜஸ்ப்பிரிட் பும்ரா அற்புதமாக செயல்பட்டு வருகிறார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவபி செயல்பாடு அற்புதமானது. மேலும் உள்ளூர் போட்டிகளில் அவர் தொடர்ந்து பந்து வீசி வருகிறார். தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் பும்ராவின் பந்துவீச்சு எடுபடும், இதனால் தான் அவர் டெஸ்ட் அணியில் தேர்வாகி உள்ளார்.

எனக் கூறினார் தேர்வுக்குழு தலைவர்.

Editor:

This website uses cookies.