டீம்னா மாதிரி ஒரு கேப்டன் இருக்கணும்டா, 10 பெரும் அப்பப்போ கேப்டனா இருந்தா டீமாடா இது - வெளுத்து வாங்கிய ஜடேஜா! 1

இந்திய அணியில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொடருக்கு கேப்டன்-ஆக இருந்தால் யார் பேச்சை அணி வீரர்கள் கேட்பார்கள் என பிசிசிஐக்கு கேள்வி எழுப்பியுள்ளார் அஜய் ஜடேஜா.

கடந்த 2021ஆம் ஆண்டு டி20 உலககோப்பைக்கு பிறகு அனைத்து வித கேப்டன் பொறுப்பில் இருந்தும் விராட் கோலி விலகிக் கொண்டார். மூன்றுவித போட்டிகளுக்கும் ரோகித் சர்மாவை கேப்டன் என்று பிசிசிஐ நியமித்தது.

அவ்வபோது அவர் காயம் காரணமாக அணியிலிருந்து விலகிக் கொள்வதால், துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்த கேஎல் ராகுல் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டனாக விளையாடினார். ஒரு சில டி20 தொடருக்கும் அவர் கேப்டன் ஆக இருந்திருக்கிறார்.

டீம்னா மாதிரி ஒரு கேப்டன் இருக்கணும்டா, 10 பெரும் அப்பப்போ கேப்டனா இருந்தா டீமாடா இது - வெளுத்து வாங்கிய ஜடேஜா! 2

இங்கிலாந்து அணியுடன் நடந்த டெஸ்ட் தொடரில் பும்ரா கேப்டன்-ஆக நியமிக்கப்பட்டார். தென் ஆப்பிரிக்கா உடனான ஒருநாள் தொடரின் போது ரிஷப் பண்ட் கேப்டன்-ஆக விளையாடினார்.

சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேச அணியுடனான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் கேஎல் ராகுல் கேப்டன் பொறுப்பேற்று விளையாடினார். இலங்கை ஒருநாள் தொடரின்போது அவரிடமிருந்து துணை கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியாவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ஹர்திக் பாண்டியா டி20 போட்டிகளுக்கு கேப்டனாகவும் ஒரு நாள் போட்டிகளுக்கு துணை கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டு இருக்கிறார். கூடுதலாக சூரியகுமார் யாதவ் டி20 போட்டிகளுக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

டீம்னா மாதிரி ஒரு கேப்டன் இருக்கணும்டா, 10 பெரும் அப்பப்போ கேப்டனா இருந்தா டீமாடா இது - வெளுத்து வாங்கிய ஜடேஜா! 3

இப்படி அணியில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொடர்களில் கேப்டன் மற்றும் துணை கேப்டனாக இருக்கின்றனர். ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பினால், சக வீரர்கள் அவர் பேச்சை கேட்பதா? அல்லது முந்தைய தொடரில் நான் தான் கேப்டனாக இருந்தேன் என்று இன்னொரு வீரர் தனது கருத்தை முன்வைக்கும் பொழுது அவர் பேச்சை சக அணி வீரர்கள் கேட்பார்களா? என கடுமையாக விமர்சித்து இருக்கிறார் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா. அவர் கூறுகையில்,

“ஒவ்வொரு அணிக்கும் கேப்டன் என்று ஒருவர் மட்டும்தான் இருக்க முடியும். காட்டில் இருக்கும் சிங்கம் போல. அவர்தான் கட்டளைகள் இடவேண்டும். அப்பொழுதுதான் அணியில் செயல்பாடுகள் சரியாக இருக்கும். அவர் பொறுப்பில் இல்லாத போது மட்டுமே மற்றொருவர் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டு செயல்படுத்த வேண்டும். ஆனால் தற்போது இருக்கும் இந்திய அணியில் அப்படி ஒரு நிலைமை நிலவவில்லை.

பும்ரா, ரோகித் சர்மா

ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பினால், அந்த அணியில் கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா பும்ரா மற்றும் ரிஷப்மென்ட் ஆகியோர் இருப்பார்கள். ஒவ்வொருவரும் கேப்டன் பொறுப்பேற்று விளையாடி இருக்கின்றனர். தங்களது கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதை ரோகித் சர்மா ஏற்கவில்லை என்றால், அணியில் சரியான மனநிலை நிலவுமா? என்பது கேள்விக்குறி தான். இந்த விஷயத்தில் பிசிசிஐ தலையிட்டு உரிய முடிவுகளை எடுத்திருக்க வேண்டும். விராட் கோலி சென்ற பிறகு கடந்த ஒன்றரை வருடங்களாக குழப்பத்திலேயே வைத்திருக்கிறது. இப்படி கையாள்வது அணியின் எதிர்காலத்திற்கு உகந்தது அல்ல.” என கடுமையாக கேள்விகள் எழுப்பி விமர்சித்திருக்கிறார் அஜய் ஜடேஜா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *