வீரர்களை முன்னாள் வீரர்களாக்கிய மூவர் 1

வீரர்களை முன்னாள் வீரர்களாக்கிய மூவர்

மிகப்பெரிய கிரிக்கெட் நாடான இந்தியாவின் கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பதென்றால் அது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. பல ஆயிரம் இளைஞர்கள் அந்த வாய்ப்பிற்க்காக பல ஆண்டுகளாக மிகக் கடுமையாக உழைத்து வருகின்றனர். அப்படி அந்த இடத்தை பிடித்தாலும் தொடர்ச்சியாக நன்றாக விளையாடி அந்த இடத்தை தக்க வைப்பது அதைவிட கடினமாக ஒரு செயல்.

அப்படி சில போட்டிகளில் சரியாக விளையாடாமல் அணியில் இருந்து கலட்டி விடப்பட்ட வீரர்களின் இடத்தை சரியான சமயத்தில் ஆக்கிரமித்த மூன்று இந்திய வீரர்களை தற்போது பார்ப்போம்.

3. கேதர் ஜாதவ் மற்றும் சுரெஷ் ரெய்னா

இது ஒரு அனாவசியமான ஒப்புமையாக இருந்தாலும். சமெபத்தில் சுரெஷ் ரெய்னாவின் இடத்தை இந்திய அணியில் சரியாக பிடித்து வைத்திருப்பவர் கேதர் ஜாதவ் தான் என்பதில் சந்தேகம் இல்லை.கிட்டத்தட்ட தோனியுடனே 2006ல் இருந்து இந்திய அணியுடம் பயணம் செய்து வருபவர் சுரேஷ் ரெய்னா. கடைசியாக இவர் ஒரு நாள் ஒபட்டியிள் விளையாடியது 2015ல் தென்னப்பைரிக்கவிற்க்கு எதிராக ஆகும்.

வீரர்களை முன்னாள் வீரர்களாக்கிய மூவர் 2
முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா

கடைசியாக சமீபத்தில் இந்தியாவில் நியூசிலாந்திற்கு எதிராக நடந்த ஒரு நாள் தொடரில் மீண்டும் அழைக்கப்பட்டர். ஆனால், காய்ச்சல் காரணமாக அந்த தொடரில் இருந்து விளகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாதவ் அவரின் இடத்தை சரியாக பிடித்துகொண்டு அதிரடியாக ரன் அடித்தது மட்டுமில்லாமல் அவ்வப்போது சுரெஷ் ரெய்னாவைப் போல் விக்கெட்டுகளையும் எடுத்து அணிக்கு உதவி வருகிறார்.

2.அஸ்வின் மற்றும் ஹ்ர்பஜன் சிங்

கிட்ட தட்ட 10 வருடங்களாக இந்திய அணியில் முன்னனி சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்தவர் முன்னாள் வீர்ர ஹர்பஜன் சிங். ஹரபஜன் சிங் கடைசியாக 2015ல் இந்திய அணிக்காக ஒரு நாள் போட்டியில் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீரர்களை முன்னாள் வீரர்களாக்கிய மூவர் 3

அதற்க்குபின் 2016ல் ஆசிய கோப்பை தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்திற்க்கு எதிராக விளையாடிய டி20 போட்டியே இறுதி சர்வதேச போட்டி ஆகும்.

1.தவான் மற்றும் கம்பிர்

ஒரு புறம் கௌதம் கம்பிர் மோசமாக ஆட மறுபுறம் சிகர் தாவன் உள்ளூர் போட்டிகளில் அற்புதமாக ஆடி வந்தார். சரியாக தவான் ஆஸ்திரலியாவுடனான் டெஸ்ட் தொடரில் தனது அறிமுக ஆட்டத்திலேயே 187 ரன் அடித்து அசத்த கம்பிர் காணாமல் போனார்.

வீரர்களை முன்னாள் வீரர்களாக்கிய மூவர் 4

2014 மற்றும் 2016ல் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்ட கம்பிர் த்னது ஃபார்மை நிருபிக்காததால் நிரந்தரமாக அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *