தற்போது தமிழ் நாட்டில் உள்ளூர் மாவட்டங்களில் தமிழ் நாடு பிரீமியர் லீக் போட்டிகள் நடந்து கொண்டு வருகிறது, இந்த போட்டிகள் அனைத்து போட்டிகளும் மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.
ஆனால் இந்த போட்டியிலும் சூதாட்டம் நடந்து கொண்டு இருப்பதாக தகவல்கள் கிடைத்து உள்ளது இதில் மூன்று நபர்களை போலீஸ் கைது செய்து உள்ளது.
கதை :
தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றுள்ளது, இதுதொடர்பாக டெல்லியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியை சேர்ந்த வினோத் ஷர்மா, விகாஸ் சவுத்ரி மற்றும் முகேஷ் அகர்வால் ஆகிய 3 பேர் சூதாட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்களிடம் இருந்து 13 செல்போன்கள், 2 லேப்டாப்கள், 3 எல்.சி.டி.க்கள் மற்றும் டி.வி. செட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடந்த விசாரணையில் ரூ.4 கோடி அளவில் சூதாட்டம் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.
சாப்ட்வேர் ஒன்றின் உதவியுடன் வாடிக்கையாளர்களின் அனைத்து கால்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அதிலேயே அவர்களின் கணக்குகள் மற்றும் தகவல்கள் பராமரிக்கப்பட்டு உள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான வினோத் சர்மா, கடந்த 2015ம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டவரான முகேஷ் ஷர்மா என்பவரது சகோதரர் ஆவார்