இந்திய பந்துவீச்சாளர்கள் வீசிய ஐந்து வேகமான பந்துகள் 1

உலகில் உள்ள மற்ற பந்துவீச்சாளர்கள் அதிவேகமாக வீசுவதை போல ஒரு முறை கூட இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அதிவேகமாக வீசி நாம் பார்த்ததில்லை. ஆனால் இந்திய பந்துவீச்சாளர்கள் ஸ்விங் செய்வதில் வல்லவர்கள் என்று சொல்லலாம். அதிவேகமாக வீசவில்லை என்றாலும் ஒரு நல்ல வேகத்திற்கு இந்திய பந்துவீச்சாளர்கள் பந்து வீசி உள்ளார்கள். அவர்கள் யாரென்று இப்போது பார்ப்போம்.

ஆஷிஷ் நெஹ்ரா – 149.7 கிமீ

Cricket, India, New Zealand, Ashish Nehra, Retirement

இந்திய அணிக்காக விளையாடிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா, இந்திய அணிக்காக பல போட்டிகளில் சிறப்பாக விளையாடி இருக்கிறார். தென்னாபிரிக்காவில் நடந்த 2003 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே அணியிடம் விளையாடும் போது 149.7 கிமீ வேகத்தில் வீசினார் ஆஷிஷ் நெஹ்ரா. அதற்கு 7 நாட்கள் முன்பு தான் 149.5 கிமீ வேகத்தில் வீசினார் நெஹ்ரா.

உமேஷ் யாதவ் – 152.2 கிமீ

Cricket, India, Fastest Bowlers, Fastest balls, Ishant Sharma, Umesh Yadav, Ashish Nehra, Varun Aaron, Javagal Srinath

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், இந்திய அணிக்காக சில முக்கிய விக்கெட்டுகளை எடுத்துள்ளார். வேகமாக பந்து வீசிய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இவர் நான்காவது இடம் பிடித்துள்ளார். இலங்கைக்கு சென்று இந்திய அணி ஒருநாள் விளையாடிய போது 152.2 கிமீ வேகத்தில் வீசினார் உமேஷ் யாதவ்.

வருண் ஆரோன் – 152.5 கிமீ

Cricket, India, Fastest Bowlers, Fastest balls, Ishant Sharma, Umesh Yadav, Ashish Nehra, Varun Aaron, Javagal Srinath

வேகமாக வீசும் திறமை இருந்ததால் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன். இந்தியாவில் நடக்கும் ரஞ்சி டிராபி போட்டியில் வேகப்பந்து பந்து வீசியவர்களில் இவரும் ஒருவர். 2014இல் இந்தியா – இலங்கை தொடரில் இலங்கைக்கு எதிராக 152.5 கிமீ வேகத்தில் பந்தை வீசி, இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்தார் வருண் ஆரோன்.

இஷாந்த் சர்மா – 152.6 கிமீ

Cricket, India, Fastest Bowlers, Fastest balls, Ishant Sharma, Umesh Yadav, Ashish Nehra, Varun Aaron, Javagal Srinath

மிக உயரமான இந்திய வீரர்களில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவும் ஒருவர். இவரது உயரமும் இவரது வேகத்திற்கு ஒரு காரணம் தான். சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து 150 கிமீ வேகத்தில் வீசும் திறமை கொண்டவர். 2008-இல் ஆஸ்திரேலிய தொடரின் போது 152.6 கிமீ வேகத்தில் வீசினார் இஷாந்த் சர்மா.

ஜவகல் ஸ்ரீநாத் – 154.5 கிமீ

Javagal Srinath

இந்த பட்டியலில் ஜவகல் ஸ்ரீநாத்தை பார்ப்பது அனைவருக்கும் ஆச்சரியமாக தான் இருக்கும். ஆனால், ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை, இந்திய அணிக்காக அதிவேகமாக வீசிய பந்துவீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் தான். 1999 கிரிக்கெட் உலகக்கோப்பையில் போது 154.5 கிமீ வேகத்தில் வீசி, இந்த பட்டியலில் முதல் இடம் பிடித்தார்.

 

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *