2. உமேஷ் யாதவ்.
இந்திய அணிக்கான டெஸ்ட் தொடரில் தொடர்ந்து இடம் பெற்றாலும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து போராடி வந்தார்.
இது இந்தவருட ஐபில் செயல்பாட்டின் மூலம் நிறைவேறியது. இந்த ஐபில் இவருக்கு சிறப்பாகவே அமைந்தது. பெங்களூரு அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறாத போதிலும், இவர் 14 போட்டிகளில் 20 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சில போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி வெற்றியும் தேடி தந்துள்ளார்.
இதன் மூலம், இங்கிலாந்து செல்ல இருக்கும் இந்திய அணியில் இடம் பெற்றிருக்கிறார்.