4. அம்பதி ராயுடு
இந்த ஐபில் 2018 அம்பதி ராயுடுக்கு ட்ரீம் சீனாகவே அமைந்தது. 10 ஆண்டுகள் ஆடிய மும்பை அணி ஏலம் எடுக்காதபோது சென்னை அணி கை கொடுத்தது. 2 கோடிக்கு மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டவர், சிறப்பாக விளையாடி பல தருணங்களில் அணியின் வெற்றியை உறுதி செய்திருக்கிறார்.
5வது 6வது வீரராக களமிறங்கும் ராயுடு, இந்தமுறை துவக்க வீரராக ஷான் வாட்சன் உடன் களமிறங்கினார். பின்பு நிகழ்ந்தது அனைத்தும் நாம் அறிந்ததே.
16 போட்டிகளில் 602 ரன்கள் குவித்தார் ஐந்தில் 6 அரைசதமும் 1 சதமும் அடங்கும். இதன் மூலம் 3 வருடங்களுக்கு பிறகு இந்திய அணியிலும் இடம் பிடித்திருக்கிறார். இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் ஒருநாள் போட்டியில் இடம் பெற்று இருக்கிறார்.