Use your ← → (arrow) keys to browse
5. ஜோஸ் பட்லர்
ஐபில் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்ட ஜோஸ் பட்லர், முதல் இரண்டு மூன்று போட்டிகளில் 5வது 6வது வீரராக கலமகிறங்கிய இவர் சிறப்பாக சோபிக்கவில்லை. பின்பு, அஜிங்க்யா ரஹானே அறிவுரைபடி, துவக்க வீரராக களமிறங்கினார்.
எதிரணியை அடிச்சு துவம்சம் செய்தார் என்று தான் கூற வேண்டும். தொடர்ச்சியாக ஐந்து அரைசதங்கள் விளாசினார். 13 போட்டிகளில் 548 ரன்கள் குவித்தார். ராஜஸ்தான் அணிக்காக அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடம் இவருக்கே. இவரின் ஸ்ட்ரைக் ரேட் 155 க்கும் மேல்.
இதனை கவனித்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரில் ஆட அழைப்பு விடுத்தது. பின்பு என்ன, அங்கும் தொடர்ந்து இரண்டு போட்டியிலும் அரைசதம் தான்.
Use your ← → (arrow) keys to browse