மற்றவர்களை போலவே இளம் வீரர் ப்ரித்வி ஷா பேட்டிங்கை பார்த்து அசந்து போனார் நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட். தான் அறிமுகமான முதல் ரஞ்சி போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார் ப்ரித்வி ஷா.
மும்பையில் ஹாரிஸ் ஷீல்டு ஸ்கூல் போட்டியில் 330 பந்தில் 546 ரன் அடித்து வெளிச்சத்தில் வந்தார் 17 வயது ப்ரித்வி ஷா. அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியிலும் சேர்த்து மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர் அதுதான். அதன் பிறகு தான் யார் என்று இந்த இந்தியாவுக்கு காட்ட அறிமுக ரஞ்சி போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார் ப்ரித்வி ஷா. சமீபத்தில் இந்த இளம் வீரரின் பேட்டிங்கை பார்த்தவர் தான் ட்ரெண்ட் போல்ட்.
நியூஸிலாந்துக்கு எதிராக வாரிய தலைவர் அணிக்காக விளையாடிய ப்ரித்வி ஷா 80 பந்துகளில் 66 அடித்தார், அதில் 9 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடங்கும். ட்ரெண்ட் போல்ட் 5 விக்கெட்டுகள் எடுத்தாலும் 50 ஓவருக்கு இந்திய அணி 295 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை துரத்திய நியூஸிலாந்து அணி விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் பறிகொடுத்தார்கள்கள். இதனால் 265 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆன நியூஸிலாந்து அணி 30 ரன் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது.
“அவருக்கு 17 வயது என்று கேள்வி பட்டேன், என்னால் நம்பவவே முடியவில்லை. அவர் சிறப்பாக விளையாடினார். தொடக்கத்தில் பந்துகள் நன்றாக ஸ்விங் ஆனது, ஆனால் அது அவருக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதே போல் சிறப்பாக விளையாடினால் அவருடைய எதிர்காலம் சிறப்பாக இருக்கும்,” என போல்ட் கூறினார்.
“தொடக்கத்தில் பந்து சிறப்பாக ஸ்விங் ஆனது, ஆனால் அதை லோகேஷ் ராகுல் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோர் பயனற்றதாக மாற்றி விட்டார்கள். மீதம் உள்ளவர்களுக்கு அவர்கள் சிறப்பான தொடக்கத்தை தந்தார்கள். இதனால், ஒரு நல்ல ஸ்கோரை அடித்தார்கள்,” என மேலும் போல்ட் தெரிவித்தார்.
“இந்த இடத்தில் வந்து விளையாடுவது தான் பெரிய சவால். ஆஸ்திரேலிய அணியே இங்கு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் நடுங்கி போனார்கள். இந்த இடத்தில் இந்திய அணியை வீழ்த்துவது தான் எண்களின் பெரிய சவால்,” என போல்ட் கூறினார்.