இன்ஷாந்த் ஜொலித்தால் இந்தியாவிற்கு ஜெயம், பேட்டிங் பிரச்சனை இல்லை : வெங்கடேஷ் பிரசாத் 1

இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக தனது திறமையை உணர்ந்து பந்துவீச வேண்டும் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்தார்.
பிடிஐ செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டி:

தனது திறமையை உணர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா பந்துவீச வேண்டும். இஷாந்த், அவரிடம் உள்ள திறமையை இன்னும் உணர்ந்துகொள்ளவில்லை என எண்ணத் தோன்றுகிறது. அவர் நல்ல உயரமாக இருக்கிறார். சிறப்பாக வேகப்பந்தை வீசுகிறார். இருப்பினும், என்ன பிரச்னை என்று புரியவில்லை.

இன்ஷாந்த் ஜொலித்தால் இந்தியாவிற்கு ஜெயம், பேட்டிங் பிரச்சனை இல்லை : வெங்கடேஷ் பிரசாத் 2
இந்திய அணியில் இடம்பெற்று 10 ஆண்டுகளை கடந்துவிட்டார் இஷாந்த். ஆனால், அணியில் இன்னமும் தனக்கான இடத்தை அவர் ஏற்படுத்திக் கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. தன்னிடம் உள்ள திறமையை அவர் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். முன்னாள் வீரர்கள் ஜாகீர் கான், கபில்தேவ் உள்ளிட்டோரின் இடத்தை அவர் பூர்த்தி செய்ய வேண்டும்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாட இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் அனைவரும் அங்கு நிலவும் சூழ்நிலையை எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்பது மட்டுமே முக்கியம். ஏனென்றால் 10 முதல் 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போன்ற மைதானங்கள் அந்நாட்டில் இன்றில்லை. அதிக பவுன்ஸ் ஆகும் நிலை இருப்பது வேண்டுமானாலும் வேகப்பந்துவீச்சாளர்களுக்குக் கை கொடுக்கும். அதை நமது பந்துவீச்சாளர்கள் எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

Cricket, India, Ranji Trophy, Sri Lanka, Ishant Sharma
தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் டேல் ஸ்டெயின், மார்கெல் ஆகியோர் நமது பேட்ஸ்மேன்களை அச்சுறுத்துவார்கள் என்று நான் கருதவில்லை. அதேநேரம், அந்நாட்டு அணியில் இடம்பெற்றுள்ள இளம் வேகப்பந்து வீச்சாளரான ககிசோ ரபாடாவை மட்டும் நமது பேட்ஸ்மேன்கள் அதிக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வோர் ஆண்டும் நமது அணி, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒவ்வொரு முறையும் பந்துவீச்சாளர்களுக்கு அதிக அழுத்தம் தரப்படுகிறது. அந்த நிலை இம்முறை மாற வேண்டும். நமது பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

இன்ஷாந்த் ஜொலித்தால் இந்தியாவிற்கு ஜெயம், பேட்டிங் பிரச்சனை இல்லை : வெங்கடேஷ் பிரசாத் 3

தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சில் டேல் ஸ்டெய்ன், மோர்னி மோர்கெல் காயத்திலிருந்து வருவதால் அச்சுறுத்தல் இல்லை, ஆனால் ரபாடாவை இந்திய அணியினர் நெருக்கமாக அவதானிக்க வேண்டும். அவர் பந்துகள் மோசமான லெந்தில் எழும்பும் இது பேட்ஸ்மென்களுக்கு பெரும் சிக்கல்தான்.

ஒவ்வொரு முறை இந்திய அணி தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து செல்லும் போது பவுலர்கள் மீது அழுத்தம் ஏற்றப்படுகிறது, இது நியாயமற்றது. பேட்ஸ்மென்கள் முதல் இன்னிங்சில் 350 அடிக்க வேண்டியது முக்கியம். அதன் பிறகுதான் பவுலர்களுக்கு வேலை. இப்போது இந்திய அணி ஒட்டுமொத்தமாக நன்றாக ஆடுகிறது, எனவே தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக தொடரை வெல்லும் வாய்ப்புள்ளதாகவே கருதுகிறேன்.

இன்ஷாந்த் ஜொலித்தால் இந்தியாவிற்கு ஜெயம், பேட்டிங் பிரச்சனை இல்லை : வெங்கடேஷ் பிரசாத் 4

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் நமது பேட்ஸ்மேன்கள் சிறப்பான பங்களிப்பை அளித்து அணியின் ஸ்கோரை 350-க்கும் மேல் உயர்த்த வேண்டும் என்றார் வெங்கடேஷ் பிரசாத்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஜனவரி 5-ஆம் தேதி தொடங்குகிறது. 3 டெஸ்ட், 6 ஒரு நாள், 3 டி20 போட்டிகளில் இரு அணிகளும் விளையாட உள்ளன. இந்த டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக ஜஸ்பிரீத் பூம்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பும்ரா நன்றாக வீசுகிறார் அதனால்தான் இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளார். ஆடும் வாய்ப்பு கிடைக்கும் போது அவர் திறமை என்னவென்று பார்ப்போம். டெஸ்ட் கிரிக்கெட்டின் தேவைகள் வேறு.

இஷாந்த், உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், முகமது ஷமி உள்ளிட்ட பந்துவீச்சாளர்களும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *