தற்போது ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றது பேட்டிங்கை தேர்வு செய்தார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இரண்டு முறை கோப்பை வாங்கி தந்த தல தோனி, கடந்த இரண்டு வருடமாக சென்னை சூப்பர் கிங்ஸ் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடாததால், சென்னையில் தோனி விளையாடி சில வருடங்கள் ஆகிறது.
முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் விளையாட இருப்பதால், பல நாள் கழித்து தோனி சென்னையில் விளையாடுவதை பார்க்க சென்னை நகரமே சென்றது.
இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுக்கு தாக்குப்புடிக்க முடியாமல், நான்கு விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. இதன் பிறகு இந்திய அணியின் சீனியர் வீரர் மகேந்திர சிங் தோனி வந்தார்.
அவர் மைதானத்திற்கு உள்ளே விளையாட வந்த போது சென்னை ரசிகர்கள் மற்றும் தோனி ரசிகர்கள் ஆகியோர் ‘MSD… MSD… MSD…’ என கரகோஷத்தை எழுப்பினார்கள். அங்கிருந்த கூட்டமே தோனியின் பெயரை முழங்கியது. அந்த வீடியோவை இங்கு பாருங்கள்: