இந்தியா-இலங்கை இடையிலான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், ஆடும் லெவனில் இடம் பிடித்தார்.
இந்தியா-இலங்கை இடையிலான கிரிக்கெட் தொடர், இந்தியாவில் நடந்து வருகிறது. டெஸ்ட் தொடரை 1-0 என இந்தியா வென்றது. தர்மசாலாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை பந்துவீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் இந்தியா சுருண்டது. அந்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வென்றது.
இந்தியா-இலங்கை இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று பகல் 11.30 மணிக்கு தொடங்கியது. கடந்த போட்டியைப் போலவே ‘டாஸ்’ வென்ற இலங்கை, மீண்டும் பந்துவீச்சையே தேர்வு செய்தது.
இந்திய அணியில் ஒரு மாற்றமாக ‘சைனாமேன்’ பவுலர் குல்தீப் யாதவுக்கு பதிலாக தமிழக ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார்.
18 வயதான சுந்தருக்கு இது அறிமுகப் போட்டி! நடந்து முடிந்த டி.என்.பி.எல். தொடரில் சுழற்பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் கலக்கியவர் இவர்! அதுவே இவருக்கு சர்வதேச வாய்ப்பை பெற்றுத் தந்திருக்கிறது. இவர் இடம் பெற்றதன் மூலமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய ஒருநாள் அணியில் இரு தமிழக வீரர்கள் (இன்னொருவர், தினேஷ் கார்த்திக்) இடம் பெற்றிருக்கிறார்கள்.
இந்தியா தரப்பில் கேப்டன் ரோகித்ஷர்மாவும், ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இலங்கை பந்துவீச்சை மிக எச்சரிக்கையுடன் இருவரும் கையாண்டனர். 13 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்தது.

Photo by Deepak Malik / BCCI / Sportzpics
அப்போது தவான் 32 ரன்களிலும், ரோகித்ஷர்மா 22 ரன்களிலும் களத்தில் நின்றனர். இலங்கை தரப்பில் நுவான் பிரதீப்பும், திசரா பெரேராவும் ஆரம்பகட்ட ஓவர்களை வீசினர்.
பின்னர் அதிரடியாக ஆடிய சிகர் தவான், 49 பந்துகளில் தனது 23ஆவது ஒருநாள் அரை சதத்தை கடந்தார். 21ஆவது ஓவரில் பதிரானா பந்தில் திரிமாண்ணேவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மொத்தம் 67 பந்துகளில் 68 ரன் குவித்தார் தவான். அதில் 9 போர்களும் அடங்கும்.
பின்னர் ரோகித் மற்றும் சென்ற போட்டியில் அறிமுகமான ஷ்ரேயாஸ் ஐயர் என இருவரும் ஜோடி சேர்ந்து இலங்கை அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். பொறுமையாக ஆபிய ரோகித் சர்மா, 115 பந்துகளில் தனது 16ஆவது ஒருநாள் சத்தை பூர்த்தி செய்தார்.
https://twitter.com/84107010ghwj/status/940863788299030528
சதம் அடித்தவுடன் ரோகித்தின் மனைவி ரீத்திகாவிற்கு அதை அற்பணித்தார் ரோகித்.
தற்போது வரை, இந்திய அணி 42.2 ஓவர்களுக்கு 271 ரன் குவித்து ஆடி வருகிறது. ரோகித் 112 ரன்னுடனும் ஷ்ரேயாஸ் 84 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.