விஜய் ஹசாரே தொடரில் இருந்து வெளியேறினார் அசோக் டிண்டா
உடல்நல குறைவால் நடப்பு விஜய் ஹசாரே தொடரில் இருந்து பந்துவிச்சாளர் அசோக் டிண்டா விலகியுள்ளார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் தொடரான விஜய் ஹசரே தொடர் நடைபெறுவது வழக்கம். இதில் தங்களை நிரூபிக்கும் வீரர்களே ரஞ்சி கோப்பையில் இடம்பெறுவார், அதில் சோபிக்கும் வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வாகும் வாய்ப்பை பெறுவார்கள்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொடர் மூலம் தங்களை அடையாளப்படுத்தி கொள்ள ஒவ்வொரு வீரர்களும் கடுமையாக போராட வேண்டும். இளம் வீரர்களுக்கு ஒரு வாய்ப்பை அமைத்து தரும் இந்த தொடர் தற்போது இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இதில் பெங்கால் அணிக்காக விளையாடி வந்த வேகப்பந்து வீச்சாளர் அசோக் டிண்டா, உடல்நலக் குறைவால் ஒட்டுமொத்த தொடரில் இருந்தும் விலகியுள்ளார்.
அசோக் டிண்டாவிற்கு பதிலாக அலோப் பிரதாப் சிங் மற்றும் பொத்துபல்லி அமித் ஆகியோருக்கு பெங்கால் கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
நடப்பு தொடரில் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள பெங்கால் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இரண்டு போட்டியில் தோல்வியடைந்துள்ளது, ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது.
ஏற்கனவே தொடர் தோல்விகளால் தவித்து வரும் பெங்கால் அணியில் இருந்து தற்போது சீனியர் வீரரான அசோக் டிண்டா விலகியிருப்பது அந்த அணிக்கு மேலும் பின்னடைவை கொடுத்துள்ளது.

ஐ.பி.எல் டி.20 தொடரில் புனே அணிக்காக கடந்த ஆண்டு சில போட்டிகளில் மட்டும் விளையாடிய டிண்டா, ரன்களை வாரி வழங்கியதால் அடுத்தடுத்த போட்டிகளில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். இதன் காரணமாக சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல் 2018ம் ஆண்டிற்கான ஏலத்தில் டிண்டா விலை போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.