தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சென்று ஐந்து ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது. இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த தொடரின் 4வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாடிய போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு பிறகு, இந்திய அணியின் விக்கெட்-கீப்பர் மகேந்திர சிங் தோனியை அனைவரும் விமர்சித்தனர். 114 பந்தை சந்தித்த தோனி வெறும் 54 ரன்கள் மட்டுமே எடுத்தார். 102 பந்துகள் எதிர்கொண்ட பிறகு தான் தன் முதல் பவுண்டரியை அடித்தார் மகேந்திர சிங் தோனி. இதனால், 190 ரன் சேசிங் செய்த இந்தியா 11 ரன் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது.
இதனால், தோனியை அனைவரும் விமர்சிக்க தொடங்கினர். இதே மாதத்தில் இந்திய அணியில் தோனி ஏன் இருக்கிறார் என்ற கேள்வி இரண்டாவது முறை எழுந்துள்ளது. இதற்கு முன்பு, இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் தோல்வி பெற்றதால், தோனியை அனைவரும் விமர்சித்தனர்.
மகேந்திர சிங் தோனிக்கு யாருமே சாதகமாக பேசவில்லை, ஆனால் கடைசியில் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனியை ஒருவர் புகழ்ந்துள்ளார், அவர் தான் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. 4வது ஒருநாள் போட்டியில் தோனி ஆமை போல் விளையாடியதால், அந்த மைதானத்தை குற்றம் சாட்டினார் இந்திய கேப்டன் விராட் கோலி.
“அவர் சிறப்பாக விளையாடுகிறார். நேரத்திற்கு தகுந்தாற் போல் விளையாட அவருக்கு சொல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை. அந்த மாதிரி மைதானத்தில் அவர் சிறப்பாக விளையாடுவதை தான் பார்க்கவேண்டும். பயிற்சியில் நான் சுழற்பந்து வீச்சாளர்களை அடித்து ஆட நினைத்தேன், ஆனால் முடியவில்லை. ஏனென்றால், பிட்ச் அப்படி. பயிற்சியின் போது அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடுகிறார்கள். கடைசி போட்டியில் மட்டும் தான் அவரால் சிங்கிள்ஸ் எடுக்க முடியவில்லை, அதற்கு முன்பு 70, 80 ரன் என சிறப்பாக விளையாடினார்,” என 5வது ஒருநாள் போட்டி முடிந்த பிறகு விராட் கோலி கூறினார்.
5வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 205 ரன் மட்டுமே எடுத்தது. அந்த இலக்கை இந்திய அணி துரத்திய போது, மற்ற வீரர்களுக்கு விராட் கோலி வேலை வைக்கவே இல்லை. விராட் கோலி 111* ரன் அடித்து இந்திய அணிக்கு தொடரை வென்று கொடுத்தார். அந்த போட்டியின் போது அவரது 28வது ஒருநாள் சதத்தை அடித்தார் கோலி. இதுவரை சேஸிங்கின் போது விராட் கோலி 18 சதம் அடித்துள்ளார், சச்சின் டெண்டுல்கர் சேஸிங்கில் 17 சதம் அடித்துள்ளார்.
ஒருநாள் தொடர் முடிந்த நிலையில், இந்த சுற்று பயணத்தில் மீண்டும் ஒரு முறை இரு அணிகளும் மோத உள்ளது. ஜூலை 9 அன்று இரு அணிகளும் ஒரே ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.