இந்தியன் பிரீமியர் லீக் தொடர் வரலாற்றிலேயே விலை மதிப்பு மிக்க வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றார். அடுத்த வருட ஐபில் தொடருக்கான தக்க வைத்து கொள்ளும் நிகழ்ச்சியில் பெங்களூரு அணி விராட் கோலி, தென்னாபிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் இளம் வீரர் சர்பராஸ் கான் ஆகியோரை தக்கவைத்து கொண்டுள்ளது.
பெங்களூரு கேப்டன் விராட் கோலிக்கு 17 கோடியும், தென்னாபிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸுக்கு 15 கோடியும் மற்றும் சர்பராஸ் கானை 3 கோடி கொடுத்ததும் பெங்களூரு அணி தக்கவைத்து கொண்டுள்ளது. இதனால் ஐபில் வரலாற்றிலேயே அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை பெற்றார் விராட் கோலி.
அணிகள் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் முழு விபரம்
ஐபிஎல்., 2018 தொடரில் விளையாடும் அணிகள் எந்த வீரர்களை தக்க வைக்க உள்ளது என்ற பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
2008 முதல் இந்தியாவில் நடந்து வரும் மிக முக்கிய உள்ளூர் போட்டியாக இந்திய பிரிமியர் லீக் போட்டி திகழ்ந்து வருகின்றது.
11வது ஆண்டில் காலடி எடுத்து வைக்க உள்ள ஐபிஎல் போட்டி, அணிகள் முன்னதாக விளையாடிய வீரர்கள் அதிகபட்சம் மூன்று பேரை தக்க வைத்துக்கொள்ள முடியும். அந்த வகையில் இன்று அணிகள் தக்க வைத்துக்கொள்ளும் வீரர்கள் பட்டியல் வெளியானது.
சென்னை சூப்பர் கிங்ஸ் :
தோனி – 15 கோடி
சுரேஷ் ரெய்னா -11 கோடி
ஜடேஜா – 7 கோடி
டெல்லி டேர்டெவில்ஸ் :
கிறிஸ் மோரிஸ் – 7.1 கோடி
ரிஷப் பண்ட் – 8 கோடி
ஸ்ரேயாஸ் ஐயர் – 7 கோடி
கிங்ஸ் லெவன் பஞ்சாப் :
அக்ஸர் படேல் – 6.75 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :
சுனில் நரேன் – 8.5 கோடி
ஆண்ரே ரசல் – 7 கோடி
மும்பை இந்தியன்ஸ் :
ரோகித் சர்மா – 15 கோடி
ஹர்திக் பாண்டியா – 11 கோடி
ஜஸ்பிரிட் பும்ரா – 7 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ் :
ஸ்டீவன் ஸ்மித் – 12 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
விராட் கோலி – 17 கோடி
டிவில்லியர்ஸ் – 11 கோடி
சர்ஃபரஜ் கான் – 1.75 கோடி
சன் ரைசஸ் ஐதராபாத்
டேவிட் வார்னர் – 12.5 கோடி
புவனேஸ்வர் குமார் – 8.5 கோடி