நேற்று வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகள் 5வது ஒரு நாள் போட்டியில் மோதியது இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் முன்னாள் சாதனையை விராட் கோஹ்லி முறியடித்து விட்டார்.
அது என சாதனை என்றால் சேசிங் செய்யும் போது சச்சின் டெண்டுல்கர் தான் அதிக சதமாக 17 சதம் அடித்தார் ஆனால் நேற்றைய போட்டியில் விராட் கோஹ்லி அந்த சாதனையை முறியடித்தார். இதன் மூலம் சேசிங் செய்வதில் 18 சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்தார் விராட் கோஹ்லி.
ஆட்டத்தின் விவரம் :
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 3- 1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 36.5 ஓவரில் இலக்கை கடந்து வெற்றி பெற்றது.
விராட் கோலி அபாரமாக விளையாடி சதமெடுத்தார். தினேஷ் கார்த்திக் அரை சதமெடுத்தார். கோலி 111, தினேஷ் கார்த்திக் 50 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
இதன் மூலம் சேஸிங்கில் அதிக சதமெடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்று புதிய உலக சாதனை படைத்துள்ளார் கோலி. இதற்கு முன்பு சச்சின் 232 இன்னிங்ஸ்களில் 17 சதங்கள் எடுத்து முதலிடத்தில் இருந்தார். நேற்றைய சதத்தின் மூலம் சேஸிங்கில் 18 சதங்கள் எடுத்து முதலிடத்தை எட்டியுள்ளார் கோலி.
சேஸிங்கில் அதிக சதம் அடித்த வீரர்கள் :
18 விராட் கோலி (102 இன்னிங்ஸ்)
17 டெண்டுல்கர் சச்சின் (232 இன்னிங்ஸ் )
11 தில்ஷன் (116 இன்னிங்ஸ் )
11 கிறிஸ் கெய்ல் (139இன்னிங்ஸ் )
10 சனத் ஜெயசூரியா ( 416 இன்னிங்ஸ் )
ஒரு நாள் தொடர்கள் முடிவடைந்தது இதனை தொடர்ந்து டி20 போட்டியில் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் விளையாட உள்ளது, மேலும் இந்த டி20 போட்டிகள் முடிவதைத்ததும் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிவடைகிறது.
இந்த சுற்று பயணம் முடிந்ததும் இந்தியா இலங்கை அணியுடன் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த மாத இறுதியில் இலங்கை இந்தியா சுற்று பயணம் துடங்குகிறது.