ஐசிசி தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறினார் இந்தியன் கேப்டன் விராட் கோஹ்லி, ஐசிசி தோடர்களில் சிறப்பாக விளையாடிய விராட் கோஹ்லி தற்போது முதல் இடத்தில் முன்னேறினார்.
ஐசிசி தொடர்களில் கோஹ்லி பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணியுடன் சிறப்பாக விளையாடியதால் அதிக புள்ளிகள் பெற்று டேவிட் வார்னரையும் டி வில்லியர்ஸையும் பின்னுக்கு தள்ளினார் கோஹ்லி.
ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னரை விட கோஹ்லி ஒரு புள்ளிகள் மட்டுமே அதிகம் பெற்றார் இதனால் கோஹ்லி தற்போது முதல் இடத்தில உள்ளார்.
அதே சமயம் இந்திய அணியின் நட்சத்திர வீரரான தவான் முதல் பத்து இடத்திற்கு முன்னேறினார்.இவர் இந்த சாம்பியன் ட்ரோபி தொடர்கள் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடி வருகிறார். இந்திய அணியின் முதல் ஆட்டமான பாகிஸ்தான் அணியுடன் தவான் சிறப்பாக விளையாடி 68 ரன்கள் சேர்த்தார் இதனால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
பிறகு இந்திய அணி தனது இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை அணியுடன் மோதியது இதில் தவான் 125 ரன்கள் அடித்து அசத்தினார் ஆனால் இந்த போட்டியில் இந்திய அணி இலங்கையிடம் தோல்வி அடைந்தது.பிறகு மூணாவது அடமான தென் ஆப்பிரிக்கா அணியுடன் 78 ரன்கள் அடித்தார். இதன் மூலம் தவான் ஐசிசி தொடர்களில் வேகமாக 1000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
இதே போல் ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த வேக பந்து வீச்சாளர் ஹசில்வுட் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்.
பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்தியாவின் வேக பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் 13வது இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிட்ட தக்கது.