கடந்த ஒரு வருடமாக இந்திய அணிக்கு முக்கிய வீரராகவும் நட்சத்திர வீரராகவும் கலக்கி வருகிறார் பரோடா ஆல்-ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா. அவரது ரோல் மாடல் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தான் என்றார் ஹர்டிக் பாண்டியா.
இந்திய அணிக்கு அறிமுகம் ஆன ஹர்டிக் பாண்டியா, இந்திய அணிக்கு முக்கியமான வீரராய் மாறினார். முதலில் ஆக்ரோஷமாக இருந்த ஆல்-ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா, பிறகு இந்திய அணியுடன் பல நாட்கள் விளையாடிய பிறகு பொறுமையாக இருக்கிறார்.
கடந்த ஒரு வருடமாக ஹர்டிக் பாண்டியா ஓய்வு இல்லமால் தொடர்ந்து விளையாடி வருவதால், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஓய்வு கேட்டார் ஹர்டிக் பாண்டியா. இலங்கை தொடர் முடிந்ததும், இந்திய அணி தென்னாபிரிக்கா சென்று விளையாடவுள்ளது, இதனால் அவருக்கு அனுமதி கொடுத்தது இந்திய கிரிக்கெட் வாரியம்.
“விராட் கோலி மற்றும் மகேந்திர சிங் தோனியை போலவே நான் ஆகவேண்டும் என்று நினைத்தேன். அவர்களை போலவே மரியாதையாக இருக்க நினைக்கிறன். ஏன் இது மாதிரி இருக்கிறார்கள் என்று நான் கவனிக்க நினைப்பேன்,” என ஹர்டிக் பாண்டியா கூறினார்.
போட்டியின் போது விராட் கோலி ஆக்ரோஷமாக இருப்பதை பற்றியும் அவர் பேசினார். எதிராணியாக இருந்தால் கூட அவர் ஜாலியாக தான் இருப்பார், அவர் ஆக்ரோஷமாக இருப்பதற்கு அவருடைய கிரிக்கெட் வெறி தான் கரணம். ஒரு இளம் வீரர் கிரிக்கெட்டா அல்லது படிப்பை தேர்வு செய்யட்டுமா என்று கேட்டால், படிப்பை தேர்வு செய்ய சொல்லுவார் என பாண்டியா கூறினார்.
“கிரிக்கெட்டுக்காக என் வாழ்க்கையில் ரிஸ்க் எடுத்தேன், ஏனென்றால் கிரிக்கெட் ஆபத்தானது. நீ படித்தால், அதற்கேற்றாற் போல் உனக்கு ஒரு வேலை கிடைக்கும். ஆனால், கிரிக்கெட்டை தேர்வு செய்தால் நீ சிறப்பாக விளையாடி கொண்டே இருக்க வேண்டும். ஆனால் அது கடினம். எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததே லக்கு தான். அதற்கு லக் வேண்டும், அப்படி நீ தேர்வு செய்துவிட்டால், நீ மிக மிக சிறப்பாக இருக்கவேண்டும் என கோலி இளம் வீரர்களுக்கு கூறுவார்,” என ஹர்டிக் பாண்டியா தெரிவித்தார்.