தோனி இல்லனா, கோலியால ஒன்னும் பண்ண முடியாது : கங்குலி

இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலி தலைமையில் வெற்றிமேல் வெற்றிகளை குவித்து வருகிறது. தொடர்ந்து 8 டெஸ்ட் தொடர்களையும், 6 ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் வெற்றி பெற்றுள்ளது.

விராட் கோலி கேப்டனாக இருந்தாலும், விக்கெட் கீப்பரும் முன்னாள் கேப்டனும் ஆன டோனியிடம் ஆலோசனை கேட்டு வருகிறார். விராட் கோலிக்கும் இன்னும் டோனியின் ஆலோசனை தேவை என கங்குலி கூறியுள்ளார்.

இதுகுறித்து கங்குலி கூறுகையில்

‘‘டோனி இந்திய அணியில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று விராட் கோலி விரும்புகிறார். தற்போது அவருக்கு 36 வயதாகிறது. 2004-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய டோனியாக அவர் இல்லை. என்றாலும், தற்போது மாறுபட்ட வீரராக உள்ளார். டோனி விராட் கோலி வெறும் விக்கெட் கீப்பராக மட்டும் பார்க்கவில்லை. கேப்டன் பதவிக்கான அனைத்து தகுதியில் உள்ள டோனியிடம் இருந்து சிறந்த அறிவுரையை பெறுகிறார்.

டோனிக்கு விராட் கோலி ஆதரவாக உள்ளார். அவருடைய ஆட்டம் மாறிவிடடது. இது எல்லோருக்கும் நிகழ்வதுதான். வயதாகும்போது உங்களுடைய இடம் குறித்து கவலை இருக்கும். இதனால் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

டோனியால் 2019 உலகக்கோப்பை தொடர் வரை விளையாட முடியும் என்று நினைக்கிறேன். அவரது உடற்தகுதி மிகவும் முக்கியமானது. விராட் கோலி அவருக்கு பக்க பலமாக இருக்கிறார் என்பது டோனிக்குத் தெரியும்’’ என்றார்.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடயேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை மதியம் 1.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் துவங்குகிறது. இந்திய அணி இலங்கை, ஆஸ்திரேலியா என் அடுத்தடுத்து ஒருநாள் தொடர்களை ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெறுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது நாளை துவங்கவுள்ள நியூசிலாந்துடனான ஒருநாள் தொடரில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கோண்ட ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

தற்போது நாளை விளையாடவுள்ள அணிக்கு 11 பேர் கொண்ட சிறந்த அணியைப் பார்ப்போம்.

இந்திய அணி : சிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, கேதார் ஜாதவ், எம்.எஸ் தோனி, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், யுஜவேந்திர சகால், ஜஸ்பிரிட் பும்ரா

நியூசிலாந்து அணியின் இந்திய சுற்றுப்பயண அட்டவனை :

பயிற்சி ஆட்டங்கள்

  • முதல் பயிற்சி ஆட்டம், அக்.17, வாரியத் தலைவர் அணிக்கு எதிராக
  • 2ஆவது பயீற்சி ஆட்டம், அக்.19,  வாரியத் தலைவர் அணிக்கு எதிராக

ஒரு நாள் போட்டிகள்

  • முதல் போட்டி, அக்.22, மும்பை
  • 2ஆவது போட்டி, அக்.25, புனே
  • 3ஆவது போட்டி, அக்.29, கான்பூர்

டி20 போட்டிகள்

  • முதல் டி20 போட்டி, நவ.1, டெல்லி (நெஹ்ரா ஓய்வு)
  • 2ஆவது டி20 போட்டி, நவ.4, ராஜ்கோட்
  • 3ஆவது டி20 போட்டி, நவ.7, திருவனந்தபுரம் (புதிய மைதானம்)

Editor:

This website uses cookies.