இந்த ஐ.பி.எல் தொடரின் கோப்பையை வெல்வது யார்…? இது சேவாக் கணிப்பு
இதுவரை ஐ.பி.எல் கோப்பையை வெல்லாத அணியே இந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்று இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ளது.
சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த வருடம் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்கிறது.
இதில் குறிப்பாக தமிழகத்தின் செல்ல பிள்ளையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரீ எண்ட்ரீ கொடுக்க இருப்பதால் மற்ற ஐ.பி.எல் தொடர்களை விட இந்த தொடருக்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில், ஐ.பி.எல் தொடரில் இதுவரை கோப்பையை வெல்லாத அணியே இந்த முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆலோசகருமான விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய விரேந்திர சேவாக் “இந்த வருட ஐ.பி.எல் தொடரில் இதுவரை ஐ.பி.எல் கோப்பையை வெல்லாத அணிகளான பஞ்சாப், டெல்லி மற்றும் பெங்களூர் இதில் ஒரு அணி தான் நிச்சயம் சாம்பியன் பட்டத்தை வெல்லும், ஒவ்வொரு அணியிலும் புது புது வீரர்கள் விளையாட உள்ளதால் இந்த வருட ஐ.பி.எல் தொடர் நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.