பயிற்சியாளர் பதவிக்கு இரண்டு வரிகளில் விண்ணப்பம் அனுப்பிய விரேந்தர் சேவாக்

சேவாக் பேட்டிங் செய்ய வரும் போது, விளையாட அவருக்கு ஒரே வழிதான் தெரியும் – பந்த பாரு, பந்த அடி. தன் வாழ்க்கையிலும் அதே வழி தான் பயன் படுத்துகிறார் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் விரேந்தர் சேவாக்.

இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு இரண்டே வரிகளில் விண்ணப்பத்தை அனுப்பியுள்ளார் விரேந்தர் சேவாக். 6 விண்ணப்பதாரர்களின் ஒருவர் தான் விரேந்தர் சேவாக். சேவாக்கை தவிர இரண்டு இந்திய வீரர்கள் விண்ணப்பித்துள்ளனர் – லால்சந்த் ராஜ்புட் & டோடா கணேஷ்.

தற்போதைய பயிற்சியாளர் அணில் கும்ப்ளே நேரடியாக உள்ளே செல்லலாம். இவர்களை தவிர பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த வெளிநாட்டு வீரர்கள் – டாம் மூடிய மற்றும் ரிச்சர்ட் பைபஸ்.

இதற்கிடையில், விரேந்தர் சேவாக்கை விண்ணப்பிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) கேட்டுள்ளது. இந்நிலையில், இரண்டே வரியில் விண்ணப்பத்தை அனுப்பினார் விரேந்தர் சேவாக். “கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு வழிகாட்டி மற்றும் பயிற்சியாளர் மற்றும் இதற்கு முன் இந்த வீரர்களுடன் விளையாடியுள்ளேன்” என அனுப்பியுள்ளார்.

முன்னாள் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் கிரேக் மெக்டெர்மோட் விண்ணப்பித்துள்ளார், ஆனால் கால தாமதமாகி விட்டது. சிறிது நாளுக்கு முன்பு, விண்ணப்பத்தை கால கெடுவுக்கு முன்னதாக அனுப்பிவிட்டேன் என கூறினார், ஆனால் கால கெடுவுக்கு பிறகு தான் வந்தது என பிசிசிஐ கூறியது.

விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களை கிரிக்கெட் ஆலோசனை குழுவில் இருக்கும் மூன்று பேர் பேட்டி எடுப்பார்கள் – சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி மற்றும் வி.வி.ஸ். லட்சுமண். இதை, ராகுல் ஜோரி மேற்பார்வை இடுவார்.

இந்நிலையில், அந்த குழு தற்போது சாம்பியன்ஸ் டிராபிக்காக லண்டனில் உள்ளது. இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு வர்ணனை செய்ய வந்த விரேந்தர் சேவாக், திரும்பி இந்தியாவுக்கு சென்றார். இதனால், ஸ்கைப் மூலம் பேட்டியில் பங்கேற்பார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.