ஒரு பேட்டியில் விரேந்தர் சேவாக்கை பற்றி அவதூறாக பேசிய பிறகு அதை நான் பேச வில்லை என கங்குலி தெரிவித்தார், ஆனால் விரேந்தர் சேவாக் அதை நம்புவதாக இல்லை.
இது அனைத்தும் ஏன் பயிற்சியாளர் பதவி கிடைக்கவில்லை என விரேந்தர் சேவாக் கூறியதில் இருந்து ஆரம்பித்தது.
ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “பி.சி.சி.ஐ அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவு இல்லாததால்தான், நான் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்படவில்லை. முதலில் எனக்குப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் எண்ணமே இல்லை.
பி.சி.சி.ஐ-யின் பொறுப்புச் செயலாளராக உள்ள அமிதாப் சௌதாரி, கிரிக்கெட் மேம்பாடு பொது மேலாளர் ஶ்ரீதர் ஆகியோர்தான் என்னிடம் நேரில் வந்து பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதுகுறித்து சிந்திக்குமாறு கூறினர். இதையடுத்து, நான் கேப்டன் கோலியிடமும் பேசினேன். அவரும் விண்ணப்பிக்குமாறு கூறினார். அப்போது நான், சாம்பியன்ஸ் ட்ராபிக்காக இங்கிலாந்தில் இருந்தேன். ‘பயிற்சியாளர் பதவிக்கு நீங்கள் ஏன் விண்ணப்பிக்கவில்லை’ என்று ரவி சாஸ்திரியிடம் கேட்டேன். அதற்கு அவர், ‘நான் ஏற்கெனவே ஒருமுறை செய்த தவறை மீண்டும் செய்ய மாட்டேன்’ என்றார். ஆனால், பிறகு அவர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தார்.
புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் இருந்த சவுரவ் கங்குலி,”இதை பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை. சேவாக் முட்டாள் தனமாக பேசுகிறார்,” என தெரிவித்தார்.
ஆனால், நான் அது போல் சேவாக்கை பற்றி கூறவில்லை என ட்விட்டரில் கங்குலி பதிவு செய்தார்.
இதனை அறிந்த சேவாக், மீண்டும் ஒரு கருத்தை கூறினார் சேவாக்.
“உங்களை நீங்களே சுத்தம் செய்யாதீர்கள். நீங்கள் ஒரு மனிதர், வாஷிங் பவுடர் அல்ல,” என அந்த ட்வீட்டிற்கு பதில் அளித்தார் சேவாக்.