ஹர்டிக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியா இருவரும் ஐபில் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றனர். இருவருக்கு இடையே ட்விட்டரில் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஹர்டிக் பாண்டியா முதலில் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
அடுத்த சில மணி நேரத்தில் அவருடைய அண்ணன் க்ருனால் பாண்டியா, ஹர்டிக் பாண்டியா பதிவிட்டிருந்ததற்கு பதிலளித்தார்.
இவர்கள் இருவருக்கு இடையே என்ன பிரச்சனை என்று இதுவரைக்கும் தெரியவில்லை. பாண்டியா சகோதரர்கள் இருவரும் நேற்றைய போட்டியின் போது விளையாடினர். இருவரும் பேசி இந்த பிரச்னையை முடித்துக்கொள்வார்கள் என நம்புகிறோம்.
இந்த பிரச்சனை என்னவென்று யாரும் கண்டுகொள்ளாத போது விரேந்தர் சேவாக் உள்ளே நுழைந்தார்.
“பணத்தை விட பெரியது ஏதும் இல்லை, சகோதரர் தந்தை கூட பெரிதில்லை (இப்படி ஒரு பாடல் வரி உண்டு), அதை நீங்கள் உண்மை என்று நினைத்து கொண்டிருக்கீறீர்கள், சண்டையை நிறுத்துங்கள்”, என விரேந்தர் சேவாக் கூறினார்.
இருவரும் கொல்கத்தா அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டனர். அந்த வெற்றியினால், புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி சென்றது.