விராட் கோலி, ரோகித் சர்மா டைம் முடிஞ்சிருச்சு; ஓய்வு பெறுவர்களா? -முன்னாள் ஜாம்பவான் கொடுத்த காரசாரமான பேட்டி!

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் இதுதான் கடைசி டி20 உலகக் கோப்பை தொடரா? என்கிற கேள்விகளுக்கு ஜாம்பவான்கள் டாம் மூடி மற்றும் அனில் கும்ப்ளே இருவரும் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடர் இந்திய அணிக்கு சாதகமாக அமையவில்லை. கோப்பையை வெல்லும் அளவிற்கு இந்திய அணி பலம் பொருந்தியதாக இருந்தாலும் அரை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டு 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து இருக்கிறது. இதனால் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பு மற்றும் பேட்டிங் மீதும், கேஎல் ராகுல் பேட்டிங் மீதும் அதீத விமர்சனங்களை முன்னாள் வீரர்கள் மற்றும் விமர்சனங்கள் பலர் வைக்கின்றனர்.

ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பில் பல குழப்பங்கள் இருக்கிறது. எந்த பந்துவீச்சாளரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அவருக்கு தெரியவில்லை. இதன் காரணமாக பந்து வீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்ற பல கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.

இந்நிலையில் ரோகித் சர்மா போன்ற மூத்த வீரர் அடுத்த டி20 உலக கோப்பையில் இருப்பாரா? என்ற சந்தேகங்கள் எழுந்திருக்கிறது. அத்துடன் நல்ல பார்மில் இருக்கும் விராட் கோலியும் 34 வயதை எட்டி இருப்பதால், அடுத்த டி20 உலக கோப்பையில் அவருக்கு 36 வயதாகும். அப்போது அவர் இந்திய அணியில் இருப்பாரா? என்று கேள்விகளும் எழுந்திருக்கிறது.

இதற்கு பதில் அளித்த அணில் கும்ப்ளே கூறுகையில், “அதை வீரர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நாம் எந்தவித கருத்துக்களையும் கூற முடியாது. அடுத்த இரண்டு வருடங்களில் அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பொருத்தும், அவர்கள் மன வலிமை எப்படி இருக்கிறது என்பதை பொருத்தும் தான் முடிவு செய்ய முடியும். அவர்கள் அடிக்கும் ரன்களை வைத்து இந்திய அணி நிர்வாகம் மற்றும் தேர்வு குழு இரண்டும் முடிவு செய்யட்டும்.” என்றார்.

இது குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் டாம் மூடி கூறுகையில், “அடுத்து இரண்டு வருடங்களில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் நிறைய டி20 போட்டிகள் விளையாடினால் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். ஏனெனில் இந்தியாவில் நிறைய இளம் வீரர்கள் இருக்கின்றனர். ஆனால் ஐபிஎல் தொடர் என்கிற மிகப்பெரிய தொடர் உள்ளது. அதில் இவர்கள் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இருவருக்குமான இடத்தை மறுக்க முடியாது. நிச்சயம் 2024 ஆம் ஆண்டு உலகக் கோப்பைகளும் இவர்கள் இருப்பார். ஆகையால் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.” என்றார்.

Mohamed:

This website uses cookies.