வாஷிங்டன் சுந்தர் மிகவும் திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரர் : பிரட் லீ 1

தமிழ் நாட்டை சேர்ந்த ஆல் ரவுண்டர் தான் வாஷிங்டன் சுந்தர் இவர் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல் படும் ஒரு வீரர் ஆவார். வாஷிங்டன் சுந்தர் ஐபிஎல் போட்டிகளில் பந்து வீச்சில் சிறப்பாக விளையாடி அனைவரிடமும் அனைத்து பாராட்டுகளையும் பெற்றார்.

இதில் ஆச்சிரியம் என்னவென்றால் வாஷிங்டன் சுந்தரின் வயது வெறும் 17 தான். தற்போது ஆஸ்திரேலியா அணியின் மிக சிறந்த வேக பந்து வீச்சாளரான பிரட் லீ இவரை பாராட்டியுள்ளார்.

வாஷிங்டன் சுந்தர் மிகவும் திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரர் : பிரட் லீ 2

தமிழ் நாட்டில் தற்போது தமிழ் நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடந்து கொண்டு இருக்கிறது இதில் வாஷிங்டன் சுந்தர்தூத்துக்குடி அணியின் விளையாடி வருகிறார்.

இதில் வாஷிங்டன் சுந்தர் துடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி காஞ்சிபுரம் அணிக்கு எதிராக 107 ரன்கள் அடித்து அசத்தினார் இவரின் உதவியுடன் அன்றைய ஆட்டத்தில் தூத்துக்குடி அணி அபார வெற்றி பெற்றது இந்த வெற்றியின் மூலம் தூத்துக்குடி அணி தொடர்ந்து நான்கு வெற்றியை பதிவு செய்து உள்ளது.

வாஷிங்டன் சுந்தர் மிகவும் திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரர் : பிரட் லீ 3

தமிழ் நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் இது வரை அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் வாஷிங்டன் சுந்தர் தான் முதல் இடத்தில் உள்ளார் அது மட்டும் இல்லாமல் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலிலும் இவர் தான் முதல் இடத்தில் உள்ளார்.

வாஷிங்டன் சுந்தர் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் அவர் தான் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

வாஷிங்டன் சுந்தரை பற்றி பிரட் லீ பேசியது :

நான் வாஷிங்டன் சுந்தரின் பெரிய ரசிகன் இவர் மிகவும் திறமையாக விளையாடி வருகிறார் வருங்காலத்தில் இவர் தனெக்கென ஒரு இடத்தை இந்திய அணியில் பிடித்து அனைத்து பாராட்டுகளையும் சாதனையையும் பெறுவார். இவர் உயரமாக இருப்பதால் இவருக்கு பந்து வீச்சும் பேட்டிங்கும் நன்றாக கை கொடுக்கிறது ” என்று ஆஸ்திரேலியா அணியின் மிக சிறந்த வேக பந்து வீச்சாளரான பிரட் லீ கூறினார்.

Vignesh N

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *