இந்த வருட இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சிறப்பாக செயல்பட வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதிஷ் ராணா ஆகியோர் இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது என தகவல் வந்துள்ளது.
தென்னாபிரிக்கா மற்றும் இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை டிசம்பர் 4ஆம் தேதி மாலை அறிவிப்பார்கள் என தகவல் வந்தது. இந்த வருட இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இருந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியவர்களுக்கு இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு கொடுக்கலாம் என இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

Photo by Shaun Roy – Sportzpics – IPL
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் போது இந்திய அணிக்கு வர தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அவர் யோ-யோ டெஸ்டில் பெய்ல் ஆனதால், அவரால் இடம் பிடிக்க முடியவில்லை. நம்பிக்கையை தளரவிடாத வாஷிங்டன் சுந்தர் பயிற்சி எடுத்து யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெற்றார்.
இந்த வருட இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிக்காக விளையாடிய தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், அற்புதமாக செயல்பட்டார். 11 விக்கெட்டுகள் வீழ்த்திய வாஷிஙடன் சுந்தர், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். துலீப் டிராபியில் சிறப்பாக செயல்பட வாஷிங்டன் சுந்தர், ரஞ்சி டிராபியில் 315 ரன் அடித்து, 12 விக்கெட்டும் எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 159 ஆகும்.
இன்னொரு பக்கம், இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய நிதிஷ் ராணாவும் இந்த வாய்ப்பை பெற்றுள்ளார். கடந்த இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் 13 போட்டிகளில் 333 ரன் அடித்து விளாசினார். அதன் பிறகு உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுகிறார். தற்போது நடந்து வரும் ரஞ்சி கோப்பையில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் இவர் ஐந்து போட்டியில் 466 ரன் அடித்திருக்கிறார்.
இதுபற்றி வாஷிங்டன் சுந்தர் கூறும்போது, ‘கடந்த முறை அழைத்தபோது துலீப் டிராபியில் விளையாடி கொண்டிருந்தேன். கால அவகாசம் இல்லாததால் முன்னேற்பாடு இல்லாமல் சென்றேன். அதனால் தேர்வாகவில்லை. இப்போது மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் என்னை தயார்படுத்திக்கொண்டு சென்றேன். தேர்வாகிவிட்டேன்’ என்றார்.