தற்போது ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி சென்னையில் நடைபெறுகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றது பேட்டிங்கை தேர்வு செய்தார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. முதலில் களமிறங்கிய ரஹானே மற்றும் ரோஹித் ஷர்மாவை திணறவைத்தார் கவுண்டர்-நைல். அவரது இரண்டாவது ஓவரில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் அஜிங்க்யா ரஹானே.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இந்த போட்டியில் 3 பந்துகளை சந்தித்ததும், 4வது பந்தை ஓங்கி அடித்தார்.
அந்த பந்து பவுண்டரி கோட்டுக்கு செல்லும் என அனைவரும் எதிர்பார்த்த போது, ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் அந்த பந்தை ஒற்றை கையில் எகிறி பிடித்து, விராட் கோலியை பெவிலியனுக்கு அனுப்பினார்.
அந்த வீடியோவை இங்கு பாருங்கள்: