மகாராஷ்டிரா மற்றும் வெஸ்ட் சோன் அணிக்காக 9 வருடங்கள் விளையாடிய கேதார் ஜாதவ் 9 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்திருக்கிறார். இதனால், இங்கு அவர் சிறப்பாக பந்து வீசுவதால் அனைவரும் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள். விக்கெட்-கீப்பிங்கும் செய்யும் கேதார் ஜாதவ், 242 உள்ளூர் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 110.5 ஓவர்கள் மட்டுமே வீசியுள்ளார்.
ஆச்சரியப்படும் படி இது வரை அவர் நம்பிக்கையை வீணாக்கவில்லை. இந்திய அணிக்காக பந்தை கையில் எடுத்த முதல் போட்டியிலேயே கேன் வில்லியம்சன், டாம் லத்தம் மற்றும் கோரே ஆண்டர்சன் போன்ற முக்கியமான விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 231 ரன் சேர்த்த வார்னர் மற்றும் பின்ச் ஜோடியை பிரித்தார்.
மகாராஷ்டிரா வீரர் கேதார் ஜாதவ் எப்படி முக்கியமான விக்கெட்டுகளை எடுக்கிறார் என அனைவரும் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள். இதை பற்றி அவரை மைக்கேல் கிளார்க் பேட்டி எடுக்கும் போது,”நம்புங்க, நான் எப்படி விக்கெட் எடுக்கறன்னு எனக்கே தெரியல. ஆனால் கேப்டன் கேட்கும் போது நான் என்னுடைய வேலையை சிறப்பாக செய்கிறேன். இது என் பேட்டிங்குக்கு உதவியாக இருக்கிறது. பந்துவீச்சில் நான் நம்பிக்கையோடு தான் இருக்கிறேன்,” என ஜாதவ் கூறினார்.
முதல் நிலை, உள்ளூர் போட்டிகளில் சோபிக்காத கேதார் ஜாதவ், இந்திய அணிக்காக இதுவரை 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவருடைய கடைசி விக்கெட் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தான்.
“என்னுடைய இயற்கை ஷாட்களை விளையாட எனக்கு கொஞ்சம் பந்துகள் தேவை. நான் சர்வதேச போட்டிகளில் விளையாடிய தொடங்கியது முதல், என் ஷாட்களை விளையாடுவதற்கு சிறிது நேரம் எடுத்துக்கொள்வேன். அதை செய்வதற்கு எனக்கு 10-15 பந்துகள் பொறுமையாக விளையாடுவேன்,” என ஜாதவ் மேலும் கூறினார்.
அந்த பேட்டியை பாருங்கள்:
https://twitter.com/PRINCE3758458/status/914704773261037570