தற்போது இந்திய அணி இலங்கையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, சில மாற்றங்களை செய்து பார்ப்பேன் என விராட் கோலி கூறினார். அதே போல், இந்திய அணி பேட்டிங் விளையாடும் போது பேட்டிங் வரிசையை மாற்றினார். ஆனால், அது சரிப்பட்டு வரவில்லை.
இந்திய இன்னிங்க்ஸை தொடங்கிய ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் முதல் விக்கெட்டுக்கு 109 ரன் சேர்த்தார். அதற்கு பிறகு, தான் இறங்காமல் லோகேஷ் ராகுல் மற்றும் கேதார் ஜாதவை அனுப்பி வைத்தார். அவர்கள் இருவரும் சென்ற வேகத்தில் திரும்பி வந்தார்கள். பின்னாடியே சென்ற கோலியும் இரண்டே பந்துகளில் அவுட் ஆனார்.
அதற்கு பிறகு சென்ற அக்சர் பட்டேல் மற்றும் ஹர்டிக் பாண்டியாவும் சோபிக்கவில்லை. ஆனால், தோனியுடன் கூட்டு சேர்ந்த புவனேஸ்வர் குமார், இருவரும் பொறுமையாக விளையாட, இந்திய அணிக்கு வெற்றியை வாங்கி தந்தனர். அற்புதமாக விளையாடிய புவனேஸ்வர் குமார் அரைசதம் அடித்து அசத்தினார்.
“230 ரன் இலக்கில் 110-1 என்று அணியின் ஸ்கோர் இருக்கும் போது, அனைவர்க்கும் வாய்ப்பு அளிக்கவேண்டும். அந்த நேரத்தில் நான் சென்றிருந்தாலும், நான் அவுட் ஆகிருப்பேன். ஏனென்றால், அவர் (அகிலா தனஞ்செயா) சிறப்பாக பந்துவீசினார்,” என கோலி கூறினார்.
மூன்றாவது ஒருநாள் போட்டியில் லோகேஷ் ராகுல் அணியில் இருப்பார் என்று தெரிகிறது. ஏனென்றால், அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இதனால், மனிஷ் பாண்டே மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகியோர் காத்திருக்கதான் வேண்டும். பிசிசிஐ வெளியிட்ட அந்த விடியோவை பாருங்கள்: